Sunday, July 1, 2007

சுட்டது..!

தலைப்புதானுங்க "சுட்டது..!"
கவிதை சுடாதது.(ஒரு முயற்சிதான்)
------------------------------------------
எனக்கு ஒரு கணமும்
உன்னைப் பிரியாதிருக்க ஆசைதான்..ஆனாலும்...
பிரிந்து விடுவதாய்ச் சொல்லிய..
உன் வார்த்தைகள்தானடி என்னைச்
சுட்டது!

இறப்பிலும் பிரியாத வரம் வேண்டுமென்றாய்..
ஆனாலும் பிரிவைப் பற்றியே பேசுகின்றாய்..
எனக்கான நேரங்கள் எல்லாம் உன் நினைவுகளுடனே..
வாழ்ந்திருக்கிறேன்..
எந்நேரமும் நான் உன்னை விட்டு விலகியதில்லை..
ஆனால் அதனை சோதித்துப் பார்க்க நினைக்கும்
உன் வார்த்தைகள் தானடி என்னைச் சுட்டது...
அதையும் நிரூபித்துக் காட்டியிருப்பேன்..
நான் அனுமனாக இருந்திருந்தால்..

Thursday, June 28, 2007

வாய்மை..!


வாய்மை யென்றும்..
உண்மை யென்றும்..
மெய்மை யென்றும்..
பல பெயர்களில்..
பொருள் சொல்லித்திரிவர்..
ஆயினும்...பொய்மையிலே
போலியாக உழல்வர்..

Monday, June 18, 2007

கல்யாணத்துக்கு ரெடியா..?



இருமனம்


தமிழ்பயணி இணைய தளத்தின் மற்றொரு பகுதியாக இருமனம்
சேவையினை அறிமுகப் படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

http://www.tamilpayani.com/irumanam/

இருமனம் இணையம் வழியாக அகிலெங்கும் பரவியுள்ள தமிழ்
மனங்களை திருமணங்கள் வழியாக இணைக்க துவங்கப் பட்டுள்ளது.
இருமனத்தில் மணமகன் மற்றும் மணமகள் குறித்த விவரங்களை
முற்றிலும் இலசமாக உள்ளீடு செய்யலாம். ஒளிப்படங்கள் இணைப்புடன்
செய்யலாம் என்பது குறிப்பிடத் தக்கது. இருமனத்தின் மூலம் தேவையான
வரன்களை தேடலாம்.

இருமனத்தில் சிறப்பு உறுப்பினர் ஆவதன் மூலம் அதிகமான
ஒளிபடங்கள், மின்னஞ்சல் தொடர்பு, சாட் வசதி மற்றும் தேடுதல்களை
சேமித்தல் போன்ற எண்ணற்ற பிற வசதிகளை பெறலாம்.

இருமனம் இணைய தளம் மூலமாக உங்கள் இனிய இல்லற வாழ்வு
தொடங்க வாழ்த்துகளுடன்,

பயன் படுத்தி இன்புற அழைக்கிறோம்.

அன்புடன்,

தமிழ்பயணி

Saturday, June 9, 2007

எல்லாருக்கும் தெரிஞ்ச ஜோக்....

எல்லாருக்கும் தெரிஞ்ச ஜோக்....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
எல்லாருக்கும் தெரிஞ்ச ஜோக்தானே அத நா வேற மறுபடியும் எழுதணுமா?

யோசிக்க மறுப்போர் சங்கம்

Thursday, May 31, 2007

காப்பாத்து...

குளத்திலும் கிணற்றடியிலும்
தாராளமாக குளித்ததாக
பாட்டி சொல்லியிருக்கா...
மூன்று குடம் தண்ணீர் விட்டு
முழுதாக குளித்ததாக
அம்மா சொல்லியிருக்கா...
இப்படிச் சொல்லிய...
இருவரும்...
என்னைக் குளிப்பாட்ட
ஒரு சிறிய சில்வர் அடுக்கு
தண்ணீருக்கே..
போராட வேண்டியிருக்கிறதாம்..
மூன்றாம் உலகப்போரும் வரலாமாம்
தண்ணீருக்காக...
கடவுளே...வாழ்வின் அடிப்படை ஆதாரமான
தண்ணீரை பாதுகாக்க வேண்டிய..
அறிவினை மனிதருக்கு வழங்கி..
தண்ணீர் கஷ்டம் வராமல் காப்பாத்து..!

Tuesday, May 29, 2007

அட இன்னும் ஒரு கவிதை எழுதுங்களேன்...

இந்த படத்துக்கு ஒரு கவிதை எழுதுங்களேன்...

சுய சம்பாத்தியம்

படிக்கும் போதும் -படித்து

முடித்துவிட்ட போதும்..
அப்பாவை வருத்தி வாங்கிய - காசில்
வாங்கிய பொருட்களில்...
கிடைக்காத சந்தோஷமும்,
நிம்மதியும் முதன் முறையாக
வாங்கிய மாதச் சம்பளத்தில்..
குடித்த டீயில் கிடைத்த்து..!

Friday, May 25, 2007

காவல்தெய்வ மாகிவிட்டாய்..



(இறப்பிலும் பிரியா காதல் ஜோடியில் ஒன்று இறக்குமென்றால்
இன்னொன்றின் நிலை இது)

காவல்தெய்வமாகிவிட்டாய்... நீ
ஆனாலும்
காப்பதற்கு என்னை வைத்தாய்...
காத்திருந்தேன் காதலையும்
காலத்தையும்..
காத்திருக்கிறேன்... இப்போதும்..
ஆனாலும்...
காலனுடன் கொண்ட கூட்டணியால்
காவல் தெய்வமாகிவிட்டாய்..நீ

Monday, May 21, 2007

கவிதை மாதிரி...

கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சேனுங்க...

எல்லா மனிதர்களுக்கும்
உணவு தேவைகளுக்கு
தன்னையே களமாக்கி
உருவாக்கிக் கொடுக்கும்
பேதமறியாத ...

பூமித்தாய்!

நகைச்சுவை(ங்க...)!

இது கொஞ்சம் புதுசுங்க...
சுட்டது மாதிரிதான் ஆனாலும் எஃப்.எம்.ரேடியோவில் கேட்ட ஒரு விஷயத்தின் உருமாற்றம்...
ஒரு பையன் அப்பகிட்ட வந்து மார்ஷீட்டைக் காட்டினான்.
அதைப் பார்த்த அப்பா"என்னடா இது வெறும் 10 மார்க்தான் வாங்கியிருக்கே"ன்னு கோபமா கேட்டாருங்க..
அதுக்கு அந்தப் பையன்
"இந்த மாதிரியெல்லாம் மாத்தி மாத்தி பேசாதீங்கப்பா..
போனவாட்டி 25 மார்க் எடுத்தப்போ என்ன சொன்னீங்க?"
"என்ன சொன்னேன்? ம் இன்னும் 10 மார்க் எடுத்திருந்தா பாஸ் ஆகியிருக்கலாம்னு சொன்னேன். அதுக்க்கென்ன இப்போ?"
"அப்படி சொல்லிட்டு இப்ப மாத்தி பேசலாமா அப்ப எடுக்க வேண்டிய 10 மார்க்கைதான் இப்போ எடுத்திருக்கேன்.அதுக்கு பாராட்டாம திட்டறீங்களே இது நியாயமா"ன்னு கேட்டான்
ஆடிப்போயிட்டாரு அப்பா பையனின் புத்திசாலித்தனத்தில்..

(இதுவும் புதுசுங்கோ:பறக்கும் விமானத்தின்மேல் உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்)



Thursday, May 17, 2007

கவிதை கிடைச்சிடுச்சிங்கோ....

ஒரு படத்துக்கு 14 கவிதை கிடைச்சுதுங்கோ எப்படி இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கோ..!

இந்த படத்துக்கு கவிதை கேட்டதுக்கு பல நண்பர்கள் எழுதி குவிச்சிட்டாங்க... கலக்கலா...
1.ஷாரா
தூது
நீந்தத் தெரியாதவனுக்கு நீச்சல் கற்றுக் கொடு மீனே
கவிதை தெரியாதவனுக்கு கவிதை கற்றுக்கொடு கண்ணே
ரசிக்கத் தெரியாதவனுக்கு ரசிக்கக் கற்றுக்கொடு ரம்பையே
பறக்கத் தெரியாதவனுக்கு பறக்கக் கற்றுக்கொடு பாவையே

நீ மேகத்தைத் தூதுவிடுகிறாயா?
இல்லை பறவையைத் தூதுவிடுகிறாயா? - எனக்குத் தெரியாது.

மொத்தத்தில் உன்னுடைய காதலைத் தூதுவிடத்தானே தேடுகிறாய் தோழியை.
அவளிடம் சொல்லிவிடு - உன் காதலன் நான் இல்லையென்று.
ஏனெனில் எனக்குக் காதல் தோல்வியென்பது பிடிக்காது...

2.ராகினி
நிலா


மெல்லிய காற்றின் ஓசையில்

மொளனாய்போன என் உணர்வுகளை

நீ.. தீண்டிப்பார்க்கும் போது.

ஒவ்வொரு பகுலும் இரவாகிப் போயின.


எதிர் பார்ப்புடன் காத்திருக்க

வைக்கின்றது.

உன் காதல் கருணை அன்பு
நினைவில் நிறுத்தி வைத்திரு

உன் இதயத்திலும்

உன் இதயத்தை வருடும்

சட்டை பையிலும்
அப்போது உன் இயத்தை

நான்முத்தமிட்டு கொண்டே இருப்பேன்.


தனிமையில் தத்தலித்த நேரங்கள்

பொசுங்கி இன்று இரு ஜீவன்..

ஓன்றாகிப்போன

நாட்கள் கண்டுகொண்டேன்
நிலவாக வந்த போது.

3. வசந்த்
கேள்விகளால்...!
----------------------
மேக நுனிகளை
நனைத்துப் பெய்யும்
வெயிலின் சூடு பரவுகின்ற
நீரின் மேல் கிடந்திருக்கும்
நின் மென்னுடலின் விரல் தீண்டும்
வெண் புறாவைப் போல்
என் மனம் உனை நாடி வந்தது
என்று நான் கூறுகையில், மறுத்து,
நுரைத்து நுரைத்து பாய்ந்து வந்து,
அரித்து, அரித்துக் கரையைத் தன்னுள்
கரைத்துக் கரைத்துச்
செல்லும் அலை போலவும்,
மலையைச் சூழ்ந்த நீர்க்கடலா,
கடலில் முளைத்த நீள்மலையா
என்றுணரா நிலை போலவும்,
உள்ளதென்று நீ சொன்னதை திருத்தி,
நாணத்தால் சரிந்த வனமா,
நாரைகள் பறக்கும் வானமா என்று நான் கேட்ட,
கேள்விகளால் நிரம்பி வழிகின்றது நம் காதல்.

4.அன்புக்கவி(அன்புடன் குழுமம்)
முகில் விடு தூது
===============

சுவர்க்கத்தில் நீயும் நானும் தான் ..
அட இங்கேயும் போட்டியா
மேகமும் மோகம் கொண்டு
தூதனுப்புகிறதே வரிசையாய்
நான்கு பறவை மடல்களை

கண்ணே திருப்பி அனுப்பி விடு
அழட்டும் அந்த மேகம்
நமக்கும் மழை கிடைக்குமே

தண்ணீரில் தத்தளிக்கும் தாமரை என்று
இன்னும் என்னன்ன உன்னை நாடி வருமோ
வா வா வந்து விடு பெண்ணே

5.தூது
====
வெட்கத்தில் மேகத்தின் பின்னொளிந்த
கதிரவன் அனுப்பிய வெண்புறா
தூது!
"தாமதிக்காமல் குளித்து செல்
பெண்ணே!
தாவரங்கள் பச்சையம் தயாரிக்க
என் ஒளி வேண்டுமாம்!! "
பொடியன்,
\லோகி/

6.!அராதா...!!!
பித்தன்
---------

கடல் நீர்
குடி நீராகும்
உந்தன் குளியலால்...

அந்த பறவை
அன்னப் பறவையாகும்
உந்தன் விரல் தீண்டினால்...

நானோ
பித்தனாகிப் போவேன்
இக்கோலத்தில்
உனைக் கண்டால்...!

7. படம் தங்களுடையது, கவிதை என்னுடையது, இதோ இங்கே...


கிளை

நான் நீரில் நீந்துகையில்
கிளை என்று எண்ணி

அமர வந்தாயோ
என் கையில்...


தத்துபித்துக் கவிதை... வளர்வதற்க்கான முயற்ச்சி...

மகிழ்ச்சியுடன்,
தீபா சத்யா!


8.Siva siva(முத்தமிழ் குழுமம்)
2007-05-14
(கடலில் நீந்தும் பெண்ணின் மேல் ஒரு கடற்புறா பறந்து நெருங்கும் படத்திற்கு எழுதியது)

வண்ண மீன்களுடன் மகிழ்ந்திட வந்து
தண்ணீர்ப் படுக்கையிலே தவழ்கிற என்றன்
கண்ணே
! வந்துவிடு
கடற்புறா வந்துன்
கண்ணை மீனென்று கவர்வதன் முன்னே
!

அன்புடன்
,
வி. சுப்பிரமணியன்

9.Kamal rajan

மனமுடைந்து தற்கொலை செய்யும்
மங்கையை காப்பாற்ற கை கொடுத்தேன்..
பிறகுதான் தெரிந்தது அவள் வெயில் கொடுமை
தாங்காமல் தண்ணிரில் இருக்கிறாள் என்று..
நானும் இறங்கிவிட்டேன்..
வெயில் கொடுமை தணிக்க அல்ல..
வழியும் அசடை தண்ணிரில் கலக்க.. :))
கவிதை மாதிரி தெரியலை.. சும்மா நகைச்சுவைக்காக எழுதியது..

10.Kishore kumar(தமிழ் நண்பர்கள் குழுமம்)
அந்த பறவைக்கு தான் என்ன ஒரு பாக்கியம்
உன்னை தொட்டு விட்டது
இதே பாக்கியம் எனக்கும் கிடைக்கும் என்றால்
அடுத்த பிறவிலாவது பறவையாக பிறக்க வேண்டும் நான்...

11.Esaki muthu
என்ன செயல் இது பெண்ணே,
ஆற்றில் இறங்கி சூட்டை தணிக்கின்றாய்
என்னை சூடேற்றிவிட்டு!!!

12.ranjan ram
உன்னை கண்டநாள்முதல் என் மனம்
என்னிடம் இல்லை..........கள்ளி
களவாடி வந்து இங்கு உல்லாசமாகவாயிருக்கிறாய்....
இது கவிதையோ அல்லது உங்கள் தலை எழுத்தோ தெரியாது......
என்னை மன்னிக்கவும் ஏதேனும் பிழையிருந்தால்...சுட்டிக் காட்டவும்

13.Kishore kumar

நன்றாக தான் நீந்துகிறாய் நீ
எனக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் தானோ
இன்னும் உன் நினைவுகளிலிருந்து
மீளமுடியாமல் தத்தளித்துக் கொண்டுக் இருக்கிறேனோ...
உயிரே எழுந்து வா!
------------------------------------
14.
வாழவரும் வாலிபத்தை
வாசலிலே விட்டுவிட்டு
என்னுயிர் பெறவில்லையென்று - நீ
உன்னுயிர் துறக்கிறியா!

*

காலமெல்லாம் உந்தன்மடி
கண்களோடு மூடிக்கடி
சொன்ன நானும் வேறு பெண்னை
மணந்ததெண்ணி மூழ்குறியா!

*

ஓடி ஓடி ஒளிஞ்ச இடம்
ஓண்ணு மண்ணா இருந்த இடம்
ஒத்த இடம் சுத்த இடம் - உன்
ஒருத்திக்கென்றே வச்ச இடம்
ஒழிஞ்சே போச்சதுன்னு
ஓடைக்குள்ள ஒடுங்குறியா!

*

காலமெல்லாம் காத்து நிற்பேன்
கண்ணுக்குள்ளே பொத்திவைப்பேன்
காளிமுன்னே சொன்னதால
காலனையே அனுப்பிடுவான்னு
கண்மணியே எனக்காக
கம்மாக்குள்ள கலக்குறியா!

*

உன்னவிட ஊருக்குள்ள
உத்தமியோ எவளுமில்ல
சத்தியமா ஒன்ன விட - என்
சரிபாதி எவளுமில்ல - நான்
சொன்ன சொல்லு தண்ணியிலன்னு
தண்ணிக்குள்ள முடிக்கிறியா!

*

உழுதுழுது உயிர் இளைத்து
உடல் வேர்வை சிந்த உவந்துழைத்து - என
ஊர்த்தலைவர்னு சொன்னசனம் - தினம்
ஊண்புண்ணாப் போன சனம்

காலமேகம் பொய்ச்சுப்புட்டான்
கழனியையும் குடிச்சிப்புட்டான்
கரிசப்பட்டி தலைவர்மக
வயசுக்கு வந்துப்புட்டா- அவள
கல்யாணம் செஞ்சா நாங்க
களியாவது சாப்பிடுவோம்னு - அந்த
சனப்பய பேச்சக் கேட்டு - எங்குல
சாமியையே சாச்சிபுட்டேன்!

*

அடுத்தூரு தண்ணிவர
அடுத்தவன் பசிதீர
நெல்லு நனைய நானும்
நெஞ்சின் ஈரம் எடுத்து வெச்சேன்!

*

என்னுசுருக் கூட்டுக்குள்ள
உன்னுசுரு இருக்குதடி
உன்னுசுருக் கூட்டுக்குள்ள
என்னுசுரு இருக்குமடி

மறந்தாப்புல மாய்ச்சுக்கிட்டு
கொலை ஒண்ணு செஞ்சிராத
மண்ணுல இருக்கும் வர
என்னை சிலுவைல அறைஞ்சிராத!

*

வெள்ளிப் புறா காலில் வெச்சு
உசுரத் தூது அனுப்பியிருக்கேன்
சுட்டுவிரல் தொட்டெழுந்து
சூரியனே வந்துவிடு
வட்டமுகம் பாக்கணுமே - என்
வானவில்லே வந்துவிடு!

*

நீ என்ன வார்த்தை சொன்னாலும் - கொஞ்சம்
உயிரோடு எழுந்து போவேன்
மன்னிச்சேன்னு சொல்லிராத - கண்ணே
மறுகணமே மரித்துப்போவேன்

- தாவணி (முகுந்தன்)

அன்புடனில் என் முதல் பதிவு!

Monday, May 14, 2007

ஜோக் சொல்லப்போறேன்-8

ஒரு பள்ளிகூடத்தில்... ஒரு மாணவன் பையிலிருந்து பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்தான்.குடிக்கும் போது வாயில் வைத்து எச்சில் படுத்தி குடித்தான், அதைப் பார்த்த ஆசிரியர்,

"தம்பி எச்சில் பண்ணி குடிக்ககூடாது அண்ணாந்துதான் குடிக்கணும் அதுதான் நல்ல பழக்கம்"என்றார்
அதற்கு அந்த மாணவன்,
"நீங்க சொல்றது சரிதான் சார் ஆனாலும் இப்படி குடிப்பதில் ஒரு நன்மை இருக்கு!"
என்றான்.
ஒன்றும் புரியாத ஆசிரியர்,
"நன்மையா? என்ன நன்மை?"
என்று கேட்டார்.

"குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுன்னு யாரும் கேக்க மாட்டாங்க பாருங்க"
என்று சொன்னதும் அதிர்ந்து போனார் ஆசிரியர் .

நண்பா !

நண்பா!
நீ இருப்பதானால்
நான் வருந்துவதில்லை
எதற்கும்...
எனக்கு எல்லாம் வல்ல
ஒரு சகோதரன் இருப்பதாக..

Sunday, May 13, 2007

எனக்கு வராத எஸ்.எம்.எஸ்.-2

முதலில் சொன்னது போலவே இது தோணினாலும்... இது வேற நிஜமான கற்பனைங்க.

எனக்கு வராத எஸ்.எம்.எஸ்.
------------------------------------
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
என்ன... தேடறீங்க..?
அதான் தலைப்பிலேயே போட்டிருக்கேனே...
வராத எஸ்.எம்.எஸுன்னு...
ஹி... ஹி...

எனக்கு வராத எஸ்.எம்.எஸ். -1

பொதுவாக ஒருவர் அனுப்பும் எஸ்.எம்.எஸ். வந்து விடுவதுதான் வழக்கம்.
ஆனா எனக்கு ஒருவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ். வரவேயில்லீங்க...
அது ஏன்? காரணம் தெரிஞ்சவங்க சொல்லுங்க....
சரி வராத மெஸேஜ் என்னன்னு சொல்லணுமில்ல...

என் மீது ரொம்ப அக்கறையுள்ள ஒரு ஜீவன் எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக சொன்னதும் என்னவாக இருக்கும்னு நான் நினைச்சது அப்படியே இருந்தது அவங்க சொன்னபோது!!!!!!

மெஸேஜ்:
கவனமாக இருக்கவும்!
உடல் நலனை கவனித்துக் கொள்ளவும்.
நேரத்துக்கு சாப்பிடவும்.
நேரத்துக்கு உறங்கவும்.
நல்ல இசை கேட்கவும்.

இதாங்க அது
அது எப்படிங்க நான் நினைச்சதே அவங்களும் சொன்னாங்க?

சரி
அந்த அவங்க யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?


சாரி அதுதான் சஸ்பென்ஸ்.
அவங்க விருப்பப்பட்டா அப்புறம் தனி பதிவா போடறேன் சரியா?

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

ஆசைப்பட்ட
எல்லாத்தையும்

காசிருந்தா
வாங்கலாம்...

அம்மாவை
வாங்க முடியுமா...

அன்பை வாங்க முடியுமா...

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Thursday, May 10, 2007

கூகிளின் புதிய தமிழ் குழுமம் - தமிழ் பிரவாகம்

சும்மா ஒரு விசிட் பண்ணி பாருங்க
http://groups.google.com/group/Piravakam?hl=en

Wednesday, May 9, 2007

இந்த டான்ஸுக்கு பாட்டெழுத முடியுமா?

காதலியே...


தெருக்குழாயில்
நீர் வரும்போதெல்லாம்
என் இதயம் துளிர்க்கும்
நீயும் வருவாயென...
நீர் சுமந்து நீ இடறினால்
என் இதயம் துடிக்கும்
உனக்கு வலிக்குமென...
உனக்குத் தெரியுமா?
நீ வராத இரு நாட்களில்
குழாய் நீரும் குழம்பியிருந்தது
என்னைப் போலவே...
எவர் எதிர்த்தாலும் பரவாயில்லை
தயவு செய்து- நீ மட்டும்
நிறுத்தி விடாதே!
நீர் சுமப்பதையும்...
நான் சுவாசிப்பதையும்...

Tuesday, May 8, 2007

உன் வாழ்வு..!

செயலினைக் கொண்டே
மதிக்கப்படும்
உன் வாழ்வு..!
வாழும் போதும்
வாழ்க்கைக்குப் பின்னும்...

Sunday, May 6, 2007

அட நீங்களும்தான் கவிதை எழுதுங்களேன்...


சும்மா ஒரு முயற்சியா... இந்த படத்துக்கு கவிதை எழுதுங்களேன்.

மறந்தேன்...

மறந்தேன் என்றே
நினைத்தாயோ..?
றப்பேன் என்றே
நினைத்தாயோ..?-உன்னை
மறுப்பேன் என்றே
நினைத்தாயோ..?
அல்லது மறக்காமல்தான் -என்னை
நினைத்தாயோ..?

இதயத்தில்...

இதயத்தில் விழுகின்றன
சம்மட்டி அடிகளாய்
உன் சூடான சொற்கள்

எல்லா பிறப்பிலும்...

நீ காட்டும் அன்புக்கு
நிகரில்லை எதுவும்
இவ்வுலகில்..
நீயே அன்னையாய்
அமைந்திட வேண்டும்
எல்லா பிறப்பிலும்...

Friday, May 4, 2007

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

கொஞ்சம் வித்தியாசமா...

தாயிற்சிறந்த கோயிலுமில்லை...
தந்தை சொல் மிக்க மந்திரமில்ல..
ஆயினும் எப்பொழுதும் தந்தை ஏன்
தாயின் நாமத்தை உச்சரிக்கிறார்
விடாமல் நச்சரிக்கிறார்...
அன்பால் அர்ச்சிக்கிறார்...
தந்தையும் தாயினுள் அடக்கம் என்பதாலோ?


********
தந்தைக்கு தலைச்சன்
தாய்க்கு இளையோன்
தவிர்க்காமல்
கொள்ளி போடணும்...
என்று சிலர் சொன்னதாக
கா(த்)தோரச் செய்தி கேட்டேன்
ஆயினும்...
அப்பா! அவசரப்பட்டு...
இறந்து விடாதீர்கள்..!
இறுதிக்கடமையை செய்ய...
நான் வந்து விடுகிறேன்!
வந்தவுடன் உயில் எழுதிவிடலாம்...
என்கிற பாசம் மகனுக்கு வருவது...
தந்தை செலுத்தியதற்கு பிரதி பலன்.
********
மாற்றாந்தாயென்றால்
சித்தியென்றுதான்
கேள்விப்பட்டோம்
அந்த சித்திகளுக்குத்தான் வரும்
மாற்றாந்தாய் மனப்பான்மை
சொந்தத் தாய்க்கு
மாற்றாந்தாய் மனப்பான்மை
உள்ளதாக கேள்விப்பட்டதில்லை..
அந்த சித்திகள் (மாற்றாந்தாய்கள்) உருவாக
காரணமாக இருப்பவர் ஒரு தந்தைதான்
சோ தந்தையை விட தாயே உயர்ந்தவர்
********

Thursday, May 3, 2007

தாய் மனமே...

தாய் மனமே...
ஈடு இணையில்லா...
அன்பின் வடிவம்!
மாற்றுக்குறையா...
கருணையின் ஊற்று!
அலுத்துக் கொள்ளாத...
சேவையின் சிகரம்!

Tuesday, May 1, 2007

உழைப்பே உயர்வுக்கு வழி!

Monday, April 30, 2007

கவிதை மாதிரி...3

செவ்வாயில்
தோஷம் இருந்தாலும்
முயற்சியிருந்தா
ல்
செவ்வாய்க்கே
போய் வரலாம்..
:))

நிறுத்தி வைத்தாய்...


நிறுத்தி வைத்தாய்...
சிலகாலங்கள்
சந்திப்பதையும்...
உரையாடுவதையும்...
ஆனாலும் எப்படி
சாத்தியமானது?
நினைப்பதையும் கூட
நிறுத்தி வைக்க...

காதல்...

நோய்களில்
சுகம் தரும் நோய்
காதல்...
நோக வைத்தாலும்...

இது கவிதை அல்ல!

இது கவிதை அல்ல!
ஒரு தளத்தில் படித்தபோது
மிகவும் யோசிக்க வைத்த வார்த்தை.

"விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள்.
ஒரு வேளை இதன்பிறகு நாம் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்."

கவிதை மாதிரி...2

******
எப்படி இருக்கும் எதிர்காலம்,
பட்டதாரி சோதிடம் கேட்டா(ன்)ல்?
******
காதலும் கவிதை போலே
விரைவில் தோன்றாது!
*****
புயலடிக்க வேண்டுதல்
பள்ளிக்கு விடுப்பு கிடைக்குமே!
*****
தலைவனுக்கோர் தலை(வி)வலி
திருமணம்!
*****
தோழமையை உயிர்ப்பிக்கும் தோழன்
கணினி!
*****

கவிதை மாதிரி...

*****
பேருந்து நிறுத்தம்
பஸ் ஸ்டாப் அல்ல
ஸ்ட்ரைக்!
*****
காதலிப்பது சரியா தப்பா?
தப்புதான்!
(ஒரு காதலி கிடைக்கும் வரை)
*****
கன்னியும் கணினியும்
ஒன்று போலே
விட்டுப்பிரிய மனம்
வராது!
*****
ஒரு வார்த்தை சொல்ல முடியாததால்
ஒரு வாழ்க்கை முடிந்தது -காதல்..!
*****

சொல்ல முடியாமல்...

கவிதைகள் சொல்கிறேன்
கண்டதையும் சொல்கிறேன்
காதலை மட்டும்...
சொல்ல முடியாமல்...
:))

Sunday, April 29, 2007

நானும்...

நானும்
காத்திருக்கிறேன்
காலம் தரும்
சிறப்பான வாழ்வு -எனும்
தளர்ந்து விடா
நம்பிக்கையுடன்...

எஸ்.எம்.எஸ். அனுப்பலாமா...2

எனக்கு வந்த... சில எஸ்.எம்.எஸ்.
***********************************
sacrifice is greater than love,
charecter is greater than beauty,
humanity is greater than wealth,
but nothing is greater than confidence.
never loose it
*****
"Nobody candiscover new oceans
untill he has the courage
to loose the sight of the shore
*****
What ever happens Just
"relax&manage" 2 make 'A' smile.
Life is not a "Problem" 2 'be' solved
but 'A' gift 2 'be' Enjoyed
Make "Everyday" 'Ur' 'best' day
*****
vaazkkai enraal 1000 irukkum
1000-il onnaa ennooda Sms irukkum
*****
We may not achieve everything we dream.
but we will not achieve anything
unless we dream
*****
Don't worry for the delay in ur success
compared to others
because construction of pyramid
take too much time
than a ordinary building
*****

வாழ்க்கை!

வாழ்கிறேன் நானும்
என்று பிறந்ததற்காக...
வாழாதே!
மக்கள் சேவையில்
பிறவிப்பயன் கண்டு
வாழ்வினை வெற்றிகொள்!

Thursday, April 26, 2007

நன்றி


வஞ்சகமும் சூழ்ச்சியும்
நிறைந்த வையகத்தில்
நன்றியுணர்ச்சியினை
நாயினிடத்தில்...
கற்க
முயலுகின்றதோ
நவீன மழலை?

இந்நாட்களில்...

இந்நாட்களில்...
அதிகம் சேர்க்கவேண்டும்
என்பதற்காகவே -அதிகம்
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்

சொந்தம்!

காதலும், கற்பனை நேசமும்
கறிக்குதவா ஏட்டுச் சுரைக்காய்!
சொந்தமான பந்தம்தான்
கடைசி வரை நிஜமாகும் சொந்தம்!

Wednesday, April 25, 2007

எஸ்.எம்.எஸ். அனுப்பலாமா...1

எனக்கு வந்த சில SMS

1."If people talk behind your back" what does that mean? simple, it
means U R 2 STEPS AHEAD of them, don't worry about such people..."

2.We Love ourself Even after Doing Many Mistakes... Then How can We
Hate others for their Small Mistakes... Strange, But True...

3."Waves are my inspiration.Not because they rise and fall, but
because each time they fall, they rise again"-Dr.Kalam.

4)"if god does not give us what we want he defin nitely gives us what
we need"

5)" accept what you cannot change, change what you cannot accept.
that is the key to be happy in life"

6)"patience and delay achive more than force and rage"

7)joke:
what are the 3 fastest ways of communication?
a) telephone b) telivision c) tell to a woman

இது உனதா? இல்லை எனதா?


இது உனதா? இல்லை எனதா?

இது உனதா? இல்லை எனதா?
உலகம் தோன்றியதுமுதலே
வர்க்கப்போராட்டத்திற்கும்...
வாரிசுப் போராட்டத்திற்கும்...
வாழ்க்கைப் போராட்டத்திற்கும்...
வழிகாட்டியாகவும் திசை மாற்றியாகவும்
தோன்றிய வாசகம்!

Tuesday, April 24, 2007

கவிதையாகத்தான் நினைக்கிறேன்

உறக்கம்
இறப்பின் ஒத்திகை
இறப்பு
நிரந்தர உறக்கம் !

-------xxxxxxx------
தோல்வி = வேதனை
வேதனை+அவநம்பிக்கை=பெரும்தோல்வி
வேதனை+முயற்சி=சாதனை


-------xxxxxxx------
அன்பு
அதிகமாகும்போது
பித்து பிடிக்கும்
அன்பு கொண்டவர்மீது
நிராகரிக்கப்படும்போது
தண்டனையாகும்
அன்பு கொண்டவருக்கு

-------xxxxxxx------
காதல் வந்தால்
சுயம் போகும்...
சுயம் போனால்
காதல் வரும்
ஞானத்தின் மீது!

------xxxxx--------

சுதந்திரம்...

சுதந்திரம்...

எல்லா வசதிகளும்
கிடைக்கும் வாய்ப்பிருந்தும்...
வண்ணத்துப்பூச்சிக்கு கிடைக்கும்
சுதந்திரம் கூட கிடைக்காமல்
சூழ்நிலைக்கைதியாய் மனிதன...

Monday, April 23, 2007

எங்ஙனம்?-பரிசு பெறாத கவிதை



வியக்கும் விழிகளின்
உட்புகுந்து, உறவுகலினூடே
தனித்திருக்கச் செய்தது
எங்ஙனம்?
பார்வையின் வெம்மையில்
கற்பனை உறவில்
தகித்திருக்கச் செய்தது
எங்ஙனம்?
உற்சாக பொழுதுகளில்
உழன்றிருக்கச் செய்ததும்,
கவலைப் பொழுதிலும்
கற்பனையில்
மகிழ்ந்திருக்கச் செய்ததும்
சாத்தியமானது
எங்ஙனம்?
உண்ணா நோன்பும்,
உறங்கா மாண்பும்
எனையறியாமலேயே
ஏற்றிருக்கச் செய்தது
எங்ஙனம்?
காண்பனவற்றிலும்,
களிப்பனவற்றிலும்,
சுவைப்பனவற்றிலும்
காணும் உட்பொருளாய்
கலந்திருந்து
மனதில் வாசம் கொண்ட
மலரே -- எனை விடுத்து
மண்ணில் உறங்கிட
சம்மதித்தது
எங்ஙனம்?

நமக்குள் காதல் - பரிசு பெற்ற கவிதை!

நம்பிக்கை குழுமத்தின் ஆண்டுவிழா கவிதைப்போட்டியில் பரிசு பெற்ற கவிதை!

நமக்குள் காதல்
நினைக்கையில் சுகம்!
விழித்துடிப்பின்
உட்படல பதிவுகள்
வழியே துவங்கியது!
சிமிட்டல்களில்
மறைந்தும்,
சிரிப்புகளில்
தொலைந்தும்
வளர்ந்தது!
சிணுங்கல்களில்
ஆர்ப்பரித்துக்
கனிந்தது!
சில கணங்களில்
சிறகடித்துப்
பறந்தது!
விட்டுப்போன
சில விரிசல்களில்
ரணங்களாய் நிறைந்தது!
ஆயினும் காதலியே
காலம் வரும் வரை
காத்திரு கண்டிப்பாக
கரமிணைவோம்!

"காதலித்தாக வேண்டும்..!"

காதல்...
உருகிடும் ஜோதியல்ல...
உருக்கிடும் ஜோதி!
செதுக்கப்படும் சிற்பமல்ல...
சிதைத்திடும் வெப்பம்!
காத்திருத்தலில்
பொறுமையைக்
கற்றுக்கொடுத்தாலும்...
காணாத பொழுதினில்
வெறுமையில்
தத்தளிக்க வைத்திடும்!
அகத்திற்கு
ஆறுதல் அளித்திட்டாலும்...
அறிவிற்கு
ஊறு விளைவித்திடும்!
ஆயினும்
என் செய்வேன்?
நான் காதலித்தாக வேண்டுமே!
மனக்குட்டையை
குழப்பி விட்டலும்...
வேதனை ஊற்றில்
கவிதை முத்தெடுக்க
உதவும் காதலை
நான் காதலித்தாக வேண்டுமே!
கவலைகளை
சூடிக்கொள்ள அல்ல...
வேதனைகளை
நாடிச்செல்லவும் அல்ல...
சோதனைகளை
தாங்கிக்கொள்ளவும் அல்ல..!
என் உள்ளத்தை
மகிழ்விக்க...
என் வழ்வை சுவைக்க...
என் கவிதை வரிகளில்
திளைத்திருக்க...
என்று எல்லாமே
சுயநலமாக இருந்தாலும்
நான் காதலித்தாக வேண்டுமே..!
நானும்,ஒருத்தியுமோ...
அல்லது
நான் மட்டுமோ...
அல்லது
காதலியே இல்லை என்றாலும் கூட
நான் காதலித்தாக வேண்டுமே...!
கற்பனையாகவோ...
கற்பனைக் காதலியையோ...
கற்பனைக் காதலையோ...
அல்லது...
வெறும் கற்பனையையேனும்...
நான் காதலித்தாக வேன்டுமே...!
மிகச்சிறந்த கவிதைகளை
படைத்திடவும்...
சிறந்த கவிஞனாய்
தகுதி பெறவும்
நான் காதலித்தாக வேண்டுமே!

ஒரு தலைராகம்

ஒரு ராகம் உனக்குள்ளே...
ஒரு ராகம் எனக்குள்ளே..
ஒன்றினையும் ஒரே ராகமாக
என்றிருந்தேன் சில காலமாக
இன்றும் இருக்கிறேன் ஒரே ராகமாக
ஒரு தலைராகமாக...

Sunday, April 22, 2007

விதி



குடிசைகளில்
வாழ்கிறார்கள்...
மாடிகளை
உருவாக்கியவர்கள்...!

சுவாசக்காற்றிலும்...

சுவாசக்காற்றிலும்...
அசுத்தங்கள்
நி
றைந்திருக்கும்...
உன் நேசத்தில் மட்டுமே
பரிசுத்தம்
நிறைந்திருக்கும்!


Saturday, April 21, 2007

சிக்னல் -ஹைக்கூ

சிக்னல்...
பொது மக்களின்
பொறுமையை
சோதிக்கும் களம்!

****************************
சிக்னல்...
விதி விலக்கு
வி.ஐ.பிகளுக்கு மட்டும்!

****************************

உழைப்பாளி..!


ஓடுகள்கூட
உயரத்திலே...
ஓடாய்த் தேய்ந்தும்
உயர வில்லை...

வாழ்க்கை...-ஹைக்கூ.

லட்சியத்திற்கும்...
யதார்த்தத்திற்கும்...
இடையிலான
போராட்டம்..!

Friday, April 20, 2007

ஜோக் சொல்லப்போறேன்-7

*****
"எங்கய்யா கூட்டத்துக்கு வந்த
யாரையுமே காணோம்?"

"எல்லாரும் தலைவரோட பேச்சுல உருகி
கரைஞ்சு போயிட்டாங்க!
*****
(காய்கறி கடையில்)
"உருள பத்து ரூபா, உருள பத்து ரூபா..."

"என்னடி இது அநியாயமா இருக்கு?
உருள பத்து ரூபாவாமில்ல"

"அதானே! உருள்றதுக்கு எல்லாமா
ரூபா குடுக்கணும்?"
*****

Thursday, April 19, 2007

ஜோக் சொல்லப்போறேன்-6

"செய்திகளை முந்தித்தரும் பத்திரிகைங்கறதுக்காக இப்படியா?"

"ஏன் என்ன ஆச்சு?"

"சீரியசா இருக்கிற மந்திரியை இறந்துட்டதா போட்டுட்டாங்க!"

*****
"டாக்டர் நான் உங்களை நம்பிதான் இருக்கேன்.

எப்படியாவது என்னை காப்பாத்திடுங்க.."

"கவலையே படாதீங்க! உங்களுக்கு ஒண்னும் ஆகாது நானும் உங்களை
நம்பிதானே க்ளினிக் ஆரம்பிச்சிருக்கேன்"
******


ஜோக் சொல்லப்போறேன்-5

இன்னும்ஜோக் சொல்லப்போறேன்
யாரும் ஓடாதீங்க.

"இந்த எறும்பு சாக்பீஸை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது!"

"என்ன புரிஞ்சிடுச்சு?"

"எங்கயாவது ஆக்ஸிடெண்ட் நடந்தா போலீஸ் எதுக்கு சாக் மார்க் போடறாங்க?"

"எதுக்கு?"

"எறும்பு வராம இருக்கத்தான்"


*****
"என்ன சார் இங்க்லீஸ் படத்துக்கு போய் தமிழ் பேரு வைக்கறேங்கறீங்க?"
"தமிழ்ல பேரு வைக்கிற படத்துக்கு வரிச்சலுகை தராங்களாம்யா"

*****

காக்கா ஏன் கருப்பா இருக்கு தெரியுமா?

அதோட அப்பா அம்மா கருப்பு அதுனால அது கருப்பா இருக்கு!
ஹி...ஹி...
:)):))

******

சரி கிளி ஏன் பச்சையா இருக்கு தெரியுமா?
அதை இன்னும் வேக வைக்கலை அதான் பச்சையா இருக்கு!

******

"பூனை குறுக்கே போனா சகுணம் சரியில்லேன்னு சொல்றது சரியாதான் இருக்கு!"
"என்னடா சொல்றே?"
"நான் காரை ரிவர்ஸ் எடுத்தப்ப குறுக்கே போன பூனை அடிபட்டு செத்துப் போயிடுச்சி!"

******


ஜோக் சொல்லப்போறேன்-4

"கலிகாலம்"
*********************************************************************

ஒரு வாலிபன் சைக்கிளில் வேகமாக வந்தான் எதிரில் வந்த
ஒருவர் மீது லேசாக மோதிவிட்டன்.
"ஸாரி சார்" என்றான் பதட்டமாக.
"பரவாயில்லைப்பா" என்றார் சாந்தமாக.
"இது தெரிஞ்சிருந்தா வேகமா மோதியிருப்பேனே"
என்றான் துடுக்காக.
*********************************************************************
பாமரன்
*********************************************************************
காரில் மோத வந்தவரிடம்...
டிரைவர்:"ஏன்யா வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?"
பாமரன்:"ஆமாங்கய்யா வரும்போது எப்போதுமே வீட்ல
சொல்லிட்டுதான் வருவேன்"
*********************************************************************
நடிகையின் கூந்தல்...
*********************************************************************
நிருபர்:"உங்க கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா?"
நடிகை:"என் கூந்தலே செயற்கைதான்..!"
நிருபர்:!?!?!?
**********************************************************************
எத்தனை தலை?
**********************************************************************
ஒருவர்:"டாக்டர் எனக்கு தலையெல்லாம் சுத்துது டாக்டர்.."
டாக்டர்:"ஆமா உங்களுக்கு எத்தனை தலை?"
***********************************************************************
காலக்கொடுமை
***********************************************************************
யாசகன்:"ஐயா ஒரு ரூவா இருந்தா குடுங்களேன்"
மற்றவர்:"என் கையில காசில்லைப்பா!"
யாசகன்:"பரவாயில்லை,உங்க பாக்கெட்ல இருக்கிறதை குடுங்க"
************************************************************************

ஜோக் சொல்லப்போறேன்-3

ரவி: நான் விமலாவுக்கு போன் பண்ணினப்ப அவங்க அம்மா எடுத்துட்டாங்க...
ராமு: அட, அப்புறம் என்ன ஆச்சு?
ரவி: ராங் மெம்பர்னு சொல்லி வெச்சுட்டேன்
*************************************************************************

மகன்: அப்பா! நான் B.A பண்ணவா? M.A பண்ணவா?

அப்பா: எதை வேணும்னாலும் பண்ணு என்னை தொந்தரவு பண்ணாதே...
**************************************************************************
டாக்டர்: ஹலோ! ரவி சவுக்கியமா இருக்கீங்களா?
ரவி: சவுக்கியமா இருந்தா ஏன் உங்களை பார்க்க வரேன்?
***************************************************************************
ரவி: படிப்பை முடிச்சிட்டீங்க மேல என்ன பண்ணப் போறீங்க?
ரகு: மேல ஒண்ணும் பண்ண முடியாது. பூமியிலேதான் எதாவது பண்ணனும்.
****************************************************************************

ஜோக் சொல்லப்போறேன்-2

வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்"

"அய்யோ!"
என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

ஜோக் சொல்லப்போறேன்-1

ஒரு மகா சோம்பேறிகிட்டே அவங்கப்பா
கேட்டாரு,
"ஏண்டா எப்ப பார்த்தாலும் சும்மாவே படுத்து கிடக்குறியே! உருப்படியா
எதாவது வேலை தேடக் கூடாதா?"

"என்ன வேலைக்கு போகச் சொல்ற?
எல்லாமே கஷ்டமான வேலையா இருக்கு!"

"ஏன் அந்த துணிக் கடையில வரச் சொன்னாங்களே போகக் கூடாதா?"

"அது சேல்ஸ் மேன் வேலை நின்னு நின்னு கால் வலி கண்டிடும்"

"சரி அந்த மளிகைக் கடையில பில் போட கூப்பிட்டாங்களே அதுக்காவது
போகலாமில்ல..."

"அது ஒரே போர் உக்கார்ந்து உக்கார்ந்து இடுப்பு வலி கண்டிடும்"

"சரி அந்த டி வி ஷோரூம் வேலைக்கு போகலாமில்ல?"

"அதுவும் ரொம்ப கஷ்டம்பா டி வியைப் பார்த்து பார்த்தே கழுத்து வலி
கண்டிடும்"

"அப்ப எந்த வேலைக்குதான் போவே?"

"ஏம்பா இப்படி உயிரை எடுக்கிறே?
படுத்துக்கிட்டே பார்க்கிற மாதிரி எதாவது ஈசியான வேலை இருந்தா சொல்லு பார்க்கிறேன்"

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்-3

லிபர்மென் என்பவரின் 101வது வயதில் பத்திரிகையளர்கள் அவரைப் பேட்டி கண்ட போது அவர் சொன்ன பதில் இது.

"இப்போது 101 வயது அடைந்து விட்ட முதியவனாக என்னை நான் கருதவில்லை. 101 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மனிதனாகவே என்னை நான் எண்ணிக் கொள்கிறேன். 80-90 வயதெல்லாம் வயோதிகமே அல்ல வயதாகிவிட்டதே என்று ஒரு போதும் எண்ணாதீர்கள், உன்களால் என்ன சாதிக்க முடியும் என்பதிலேயே கவனமாக இருங்கள்.அதுதான் வாழ்க்கையின் நம்பிக்கைக்கும் மகிழ்ச்சிக்கும் வழி!"

மகிழ்ச்சி!

அகிலமெங்கும்
தேடிக் கொண்டிருக்கிறோம்
அகத்தில்
இருப்பதை அறியாமல்!

Wednesday, April 18, 2007

சன்மானம்!

பிறப்பிலிருந்து...
இறப்பு வரை
தொடரும் சங்கிலியாகத்தான்
இருக்கிறது... இந்த சன்மானம்.
ஆனாலும் ஆயிரக்கணக்கில்
எழுதிக்குவிக்கும் கவிஞனுக்கு...
ஒரு கமெண்ட் கிடைத்தால்
அதுவே பெரிய சன்மானம்!

Monday, April 16, 2007

காதல்!

காத்திருத்தலில்...
சுகம்!
காத்திருக்க வைப்பதில்...
சோகம்!

மனசு

குழம்பிய
குட்டையாய்...
காதலுக்கு
காத்திருக்கும்
மனசு!

கோபம்

சாதாரண
விஷயங்களுக்கெல்லாம்
வரும் கோபம்
சத்தியமாக
வர மறுக்கிறது
நீ தவறே செய்தாலும்!

கோவில் - ஹைக்கூ...

கோவில் - ஹைக்கூ...

ஒரு கோவிலே...
கோவிலுக்கு...
போகிறதே!
அம்மா!


ஹைக்கூ- கொஞ்சம்...

குறும்பா(ஹைக்கூ...)
***
வாழ்க்கை

நம் வசப்படும்
அல்லது
வசப்படுத்தும்
***
மரணங்கள்
சம்பவிக்கும்
சம்பவங்கள்
மரணிக்கும்
***
பூக்கள்
புன்னகைக்கும்
புன்னகைகள்
பூக்கும்
***
உலகம்
ஆசைவயமானது
ஆசைகள்
உலக மயமானது
***
தாயிற்சிறந்த
கோயிலுமில்லை
கோயிலில் மட்டும்
தெய்வம் இல்லை
***
கவிதைகள் சிந்தனைகளை
வளப்படுத்தும்
சிந்தனைகள் கவிதைகளை
வலுப்படுத்தும்
***
கவிஞன் காதலை
காவியமாக்குவான்
காதல் கவிஞனை
காலியாக்கும்
***

மகிழ்ச்சியாகவாழ சில வழிகள்-2


மானிடத்தின் தேவை எதுவென்று நினைக்கிறீர்கள்? ''மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..
மகிழ்ச்சி''! ஆமாம். மகிழ்ச்சியோடு வாழும் வாழ்க்கைதானே வெற்றிகரமான
வாழ்க்கையாகும்.

அந்த மகிழ்ச்சியை மன நிறைவின் மூலம் நாம் உணர்கிறோம். அப்படியோர்
மனநிறைவைப் பெறுவதற்கான இந்த நான்கு குணங்களும் நமக்குள் வந்துவிட்டால்
நாம் முழுமையாக வெளிப்பட்டு நமது இலக்கை நிச்சயமாக எட்டமுடியும்.

மனிதநேயம்

ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் மொட்டுவிட்டிருக்கும் முதன்மையான இயல்பு இந்த
''நேயம்''. இந்த மொட்டானது மலர, மலர மனிதனின் வாழ்க்கையும் மலர்ந்து
மணம் வீசத் தொடங்கி விடுகிறது.

அதென்ன நேயம்? அன்பு, பாசம், கருணை, காதல் என்னும் சொற்களின் சாரம். இந்த
நேயமே மனிதர்களை இணைக்கிறது, பிணைக்கிறது, அரவணைக்கிறது, ஆற்றல்
தருகிறது, மன்னிக்கிறது, ஆறுதல் தருகிறது, ஊக்கம் தருகிறது,
உருவாக்குகிறது...

அப்படிப்பட்ட நேயமே மனித வாழ்வின் அடிப்படையும், அவசியமானதும்,
அற்புதமானதும், ஆக்கப்பூர்வமானதுமான குணமாகும். நேயம் மட்டும் மலராது
போனால், மனித குலமே வேரற்றுப் போகும். புகையும், பகையும், போரும்,
வெறுப்பும், விரக்தியுமே மிஞ்சும். சுயம் கெட்டு, சூழலும் கெட்டு மனித
இனம் பட்டுப் போகும். இந்தப் பிரபஞ்சமே இற்றுப்போகும்.

இந்தப் பிரபஞ்சம் என்னும் பெரும்பொருளே, ''நேயம்'' என்னும் அரும்
பொருளால் உருவானதே அன்றி வேறில்லை. கருணை வடிவான எதையும் நாம் கடவுளென்று
அழைப்பதும் அதனால்தான். நேயத்தின் கருப்பை தாய்மை. தாய்மையின்
பரிணாமந்தானே இந்த உயிரினம். அத்தனை அருங்குணங்களுக்கும் தலையாயது நேயமே
என்பதால் நேயத்தை நம் நெஞ்சின் அடித்தளமாக்குவோம்.

நேர்மை

நேர்மையானது வேறொன்றுமில்லை, அது நிஜமாய் இருப்பது. நம்பகத்தன்மையின்
மறுபெயரே நேர்மை. உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்வது அது. சரியாய்
முறையாய் நடப்பது. நேர்மை என்பது நேர் நிற்பதைக் குறிக்கிறது.

பேராசை கொள்பவர்கள் பொறாமைப்படுவார்கள், பொறாமைப்படுபவர்கள் சூழ்ச்சி
செய்வார்கள், குறுக்கு வழியில் செல்ல முயல்வார்கள், பொய் சொல்வார்கள்,
கோபப்படுவார்கள், குதர்க்கம் பேசுவார்கள், ஆரம்பத்தில் அவர்கள் காட்டில்
மழை பெய்யும். நாளடைவில் அத்தனையும் பொய்த்துவிடும். இது இயற்கையின்
நியதி. நேர்மை தொடக்கத்தில் கடினம். நேர்மையாய் நடக்கத் துணிவு
வேண்டும், மனதில் உறுதிவேண்டும், நாளடைவில் நேர்மையே வெல்லும். நெஞ்சில்
அமைதி குடிகொள்ளும்.

வாழ்க்கையானாலும், வர்த்தகமானாலும் அரசியலானாலும், சமூகமானாலும் ஒவ்வொரு
தனி மனிதனும் நேர்மையின் வழி நிற்கும்போது அவன் ஒரு தலைசிறந்த தலைவனாக,
பலரும் போற்றும் முன்னுதாரணமாகத் திகழ்வான் என்பது உறுதி. உலகின்
முன்னோடிகளெல்லாம் நேர்மையைக் கடைபிடித்து நெஞ்சு நிமிர வாழ்ந்தவர்களே!
என்பதுதான் வரலாற்று உண்மை. வரலாறுகளை நினைவில் கொள்வோம். வாழ்வில்
நேர்மை கொள்வோம். நாமும் வரலாறு படைப்போம்.

நேரம்

''மணி என்ன''? எனக் கேட்டு நமது மணிக்கட்டைத் திருப்பச் செய்யும்
பொழுதெல்லாம் நமக்கு உணர்த்துவது நேரத்தின் அருமையைத்தானே! ''நேரத்தை''
நறுக்குத் தெறித்தாற்போல் கூறுவது என்றால் அதை ''நமது வாழ்நாள்'' என்று
வரையறுப்பதுதான். நேரச் செலவு என்பது நமது வாழ்நாளின் செலவென்று உணர்வது
தானே பொருந்தும்.

செலவழிக்கப்பட்ட பணத்தை, செலவழிக்கப்பட்ட பொருளை மீண்டும் பெற்றுவிட
முடியும். ஆனால் செலவழிக்கப்பட்ட நேரத்தை நம்மால் திரும்பப் பெறமுடியுமா
என்ன?

''நேரத்தை மதித்தல்'' என்பது அரிய பண்பு, நேரத்தைப் போற்றுபவர்கள்
வெற்றி பெறுகிறார்கள், உடல் நலத்தோடு வாழ்கிறார்கள், அவர்கள் மன
உளைச்சலுக்கு ஆளாவதில்லை. காரணம் தெரியுமா? நேரத்தைப் போற்றுபவர்கள் ஏதோ
ஒரு இலக்கைக் குறித்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலக்கிருப்பதால்
அவர்களிடம் ஒரு திட்டமிருக்கிறது. திட்டமிருப்பதால் அவர்களிடம் முன்
உரிமைப் பட்டியலிருக்கிறது. முன்னுரிமைப் பட்டியல் என்பது நேர
நிர்வாகத்திற்கான அடிப்படையே அன்றி வேறில்லை.

அவர்களிடம் ''அலுவலக நேரம்'', ''வீட்டு நேரம்'', டி.வி நேரம்,
உடற்பயிற்சி நேரம், படிக்கும் நேரம், சந்தை நேரம், சிந்தை நேரம், எனப் பல
நேரங்கள் உண்டு. ஆமாம் அவர்கள் நேரத்தை நிர்வகிக்கிறார்கள். எனவே தமது
வாழ்க்கையை தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். நாமும் நம் நேரத்தின்
மீது கவனம் செலுத்தத் தொடங்கினால் வள்ளுவர் சொல்வது போல உலகையே
வெல்லலாம்.

''ஆடிப்பட்டம் தேடி விதை'' ''காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்''
என்பவையெல்லாம் ''ஒவ்வொரு செயலுக்கும் உரிய, உகந்த காலமென்று ஒன்று
உண்டு. அதனை உணர்ந்து செயல்பட்டால் எதிலும் வெல்லலாம்'' என்பதையே நமக்கு
எடுத்துரைக்கிறது. எனவே நாம் நமது காலத்தின் அருமையை உணர்வோம்,
காரியமாற்றுவோம், வெற்றி பெறுவோம்.

நேர்த்தி

எதையும் செய்து முடிக்கும் ஆற்றலை ''செய்திறன்'' என்கிறோம். சரியானதைத்
தேர்ந்தெடுத்து சரியான முறையில் செய்து முடிக்கும் முறைமையை
''செயல்நேர்த்தி'' என்கிறோம்.

''செய்வன திருந்தச் செய்'' என்கிறது தமிழ். ஆனால் நடைமுறையில், நாம்
செய்த செயலையே மீண்டும், மீண்டும் திரும்பச் செய்து காலத்தையும்,
மூலப்பொருள்களையும், மனித சக்தியையும் வீணடிக்கிறோம். ஒவ்வொரு முறையும்,
ஒவ்வொரு செயலையும் ஒழுங்காய் செய்வது என்பதையே நேர்த்தி என்கிறோம்.

''நேர்த்தி'' என்பது செய்யும் செயலை மட்டும் குறிக்காமல் செயல்முறையையும்
வலியுறுத்தி நிற்கிறது. செய்முறை என்பது அதில் ஈடுபடும் மக்களை எப்படிப்
பயன்படுத்துகிறோம் என்பதை பற்றியது. மக்களை ஈடுபடுத்தும் எந்தச்
செயலையும் முறையாகச் செய்ய வேண்டுமெனில், உரையாடும் கலை, ஊக்கமூட்டும்
முறை, பிறரை புரிந்து கொள்ளும் விதம் மற்றும் சிக்கலைத் தீர்த்து
வைக்கும் அணுகுமுறை என இத்தனையிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

அப்போதுதான் நேர்த்தியோடு நாம் நம் குடும்பத்தையோ, நிறுவனத்தையோ,
தொழிலையோ, அரசியலையோ, சமூக அமைப்பையோ நடத்த முடியும் என்பதுதான்
உளவியல்பூர்வமான நடைமுறை உண்மை. அப்படிச் செயல்படும்போது அதில்
ஈடுபட்டிருக்கும் அனைவர் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும். அவர்கள் யாவரும்
ஒரே அணியாகச் செயல்படுவார்கள்.

இந்த அணுகுமுறையில் அடியெடுத்து வைத்து நேயம்கொண்டு, நேர்மை கொண்டு,
நேரம் பேணி, நேர்த்தி காண்போம்! நம் வாழ்க்கையை மகிழ்ச்சியால்
நிரப்புவோம்.

(நன்றி:சிஃபி தமிழ்)

Sunday, April 15, 2007

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்-1


ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும்
வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
***************
உங்களது அன்றாட
நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்
வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
***************
எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்
செய்து கொண்டிருங்கள். அந்தப் பழக்கம் உங்களை
சலிப்படையாமல் இருக்கச்செய்யும்.
***************
ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச்
செய்யாமல் இருக்க இடையிடையே
வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
***************
நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
***************
நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
***************
நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து
மனம் விட்டுச் சிரியுங்கள்.
***************
மன இறுக்கத்தையும் சோர்வினையும்
மாற்றிக்கொள்ளுங்கள்.
***************
மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
***************

கல்

உடைத்திடும் பொழுதினில்
வேதனைப்படுமோ..?
செதுக்கிடும் பொழுதினில்
பெருமிதப்படுமோ..?
அர்ச்சிக்கும் பொழுதினில்
ஆனந்தப்படுமோ..?
உருவங்கள் மாறிடும்
உயிரற்ற கல்..!

முயற்சி!

மீண்டும் மீண்டும்
பூப்பதால்தான்
செடிகளும்...
புத்துணர்ச்சி
பெறுகின்றன!

வெட்ட வெட்ட
தழைப்பதனால்தான்
மரங்களும்...
விருட்சங்களாகின்றன!

இரவும் பகலும்
மாறி மாறி வருவதால்தான்...
நாட்களும்...
இனிமையாகின்றன!

வெற்றியிலும்,தோல்வியிலும்
முயற்சியினை தொடரும்
மனிதன்தான்...
சாதனையாளன் ஆகிறான்!

Saturday, April 14, 2007

இனிய புத்தாண்டில்..!


மனித நேயத்தின்...
மகத்துவத்தில்...
உயர்வளிக்கும்...

சமத்துவத்தில்...
ஒருங்கிணைந்த...
உழைப்பில்...
சகோதரத்துவத்தின்...
மகிழ்ச்சியில்...
புதிய சரித்திரம் படைக்க...
முயற்சிப்போம்
இனிய புத்தாண்டில்..!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Thursday, April 12, 2007

காப்பாற்று..!

சுவாசிக்கும் காற்று
அசுத்தம் ஆனது
குடிக்கும் நீரும்
அசுத்தம் ஆனது
உண்ணும் உணவும்
இருக்கும் நிலம்
இயல்பு மாறியது
நஞ்சு ஆனது
ஓசோன் மண்டலம்
ஓட்டையானது
மனிதா!
எல்லாம் உன் சுயநலத்தால்
இனியேனும்
பொதுநல நோக்கோடு
செயல்படு
மாசுபட்டு
அழிந்து வரும்
இயற்கை வளங்களை
காப்பாற்று!

கவிதையா?

கண்ணில் தோன்றும் காட்சியெல்லாம்
கவிதையாக்கத்தோன்றும்..
ஆயினும் உணர்வின் பதிவுகள் மட்டுமே..
கவிதையாகத்தோன்றும்!

விவாதங்கள் பலநேரங்களில்
வெட்டியாகத்தோன்றும்..,
விவாதமில்லா கருத்துக்கு..
வெற்றி எங்கே தோன்றும்?

நல்ல கருத்துகள் பல நேரங்களில்
கண்டு கொள்ளப்படாமல் போகும்...
ஆயினும் வலிமையான கருத்துகள்
என்றும் நிலைத்து நிற்கும்!

Saturday, April 7, 2007

Missed Call


ரொம்ப முக்கியமாக
ரொம்பவே வேண்டியவருக்கு...
போன் பண்ண வேண்டியிருந்தது.
பேலன்ஸ் இல்லாததால்
மிஸ்டு கால் பண்ணினான்
எப்படியும் பதில் வரும் எனும் நம்பிக்கையில்...
பதிலும் வந்தது மிஸ்டு காலாகவே!
புரிந்தது!
வேணும்னா அவன் பேசட்டுமே!
என்கிற எண்ணத்தில்...
மீண்டும் இரு பக்கமும் தொடர்ந்தது...
மிஸ்டு காலாகவே!
கடைசி வரையிலும்...
கால் பண்ணவே இல்லை இருவரும்...
இப்பவும் இப்படித்தான்...
மிஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்
பலரும்,
பல நண்பர்களையும்...
பல உறவுகளையும்...

பேதமை!

பேதமை

பூவுக்கும், சாவுக்கும்
மதமில்லை...
பூமிக்கும், சாமிக்கும்
பேதமில்லை...
வானுக்கும், நீருக்கும்
நிறமில்லை...
அன்புக்கும், அறிவுக்கும்
எல்லையில்லை!

Thursday, April 5, 2007

ஞானம்!

புத்திசாலிகளும்,

முட்டாள்களும்

பிறப்பதில்லை...

உருவாக்கப்படுகிறார்கள்!

சோதனை!

பணமென்றால்
பிணமும் வாய் திறக்கும்
என்பதனை சோதிக்கவோ?
இறந்தவர்
நெற்றியில் காசு!

Monday, April 2, 2007

I Miss You SoMuch !

கொஞ்சம் நாள் என்
அம்மாவை
பிரிந்திருந்த
ரணத்தின் பதிவு இது.
அம்மா!
உன்னைப்
பிரிந்திருந்த அந்த
சில நாட்களில்
நான் இழந்தது
எத்தனையோ!
இன்னும் நான்
மீளவில்லை அந்த
பிரிவின்
துயரிலிருந்து
உன்னிடம் வந்து
சேர்ந்த பின்னும்.
எதைச் சொல்வேன்?
எதைவிடுவேன்?
நிச்சயம் நான்
பைத்தியமாகவே
ஆனேன்.
இன்னுமொரு பிரிவினை
நிச்சயம் என்னால்
தாங்க முடியாது.
இனியொரு
பிரிவென்றால் அது
உயிரின் பிரிவாக
இருக்கட்டும்.

Sunday, March 25, 2007

(புதிய தாலாட்டு) சமூகம்... ஜாக்கிரதை!

ஜாக்கிரதை..!

காந்தியாய் வாழ நினைப்பவர்களை
கோட்சேக்களாய் மாற்றி விடும்
கயவர்கள் நிறைந்திருக்கிறார்கள்!

ஜாக்கிரதை..!

புத்தனாய் இருக்க நினைப்பவர்களை
பித்தனாய் மதிக்கும்
எத்தர்கள் நிறைந்திருக்கிறார்கள்!

ஜாக்கிரதை..!

வறுமைக்கு ஆட்பட்டவர்களை
கொடுமைக்காரர்களாய் மாற்றும்
வஞ்சகர்கள் நிறைந்திருக்கிறார்கள்!

எண்ணிய முடிக்கப் பிறந்த
திறன் மிக்க என் கண்ணே
ஏய்க்கும் உலகில் நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
ஜாக்கிரதை..!

Thursday, March 22, 2007

அம்மா!


உலகிலேயே...
மிகவும் அழகானது பூ
மிகவும் அதிசயமானது தாஜ்மஹால்
மிகவும் பிரகாசமானது சூரியன்
மிகவும் குளுமையானது நிலவு
மிகவும் தெளிவானது நதி
மிகவும் இனிமையானது தென்றல்
ஆனாலும்...
இவை எதுவும் ஈடு இல்லை
எனது அம்மாவின்
எல்லாம் வல்ல அன்பிற்கு!

Friday, January 26, 2007

சம்மதித்தால்...

நிலவுக்கு
போவதொன்றும்
சிரமமான காரியமில்லை
அன்பே - நீ
சம்மதிதால்...
டூயட்டே படி விட்டு வரலாம்!

தேடல்...

தேடினேன்...

அன்பினை பகிர்ந்து கொள்ள
அரியதோர் இதயத்தினை!



தேடினேன்...

கிடைத்த இதயத்தினை
பரிசுத்தத்தின்
பாதச்சுவடுகளில்
பதித்திடும் வாய்ப்புகளை!



தேடினேன்...

கிடைத்த வாய்ப்புக்களில்
உள்ளத்தினை உணர்த்திடும்
தைரியத்தினை!

தேடினேன்...

தைரியம் வந்த போது
காதலித்துத் தொலைத்த
காதலை!

Wednesday, January 24, 2007

"ஹேப்பி நியூ இயர்"


நாட்காட்டி வாங்கவும்
வசதியில்லை,
ஆனாலும் மகிழ்ச்சியாகத்தான்
இருக்கிறது...!
"ஹேப்பி நியூ இயர் சொல்வதில்!"

இளைஞனே!

உனது முயற்சிக்கு
வாய்ப்புகள் காத்திருக்கு..!
உனது வெற்றிக்கு
லட்சியங்கள் காத்திருக்கு..!
உனது சாதனைக்கு
மாலைகள் காத்திருக்கு..!
உனது உழைப்பிற்கு
சரித்திரம் காத்திருக்கு..!
இருந்தும் - நீ!
எதற்காக “காத்து” இருக்கிறாய்
சோம்பலை தகர்த்தெறியாமல்?

" பெருமிதம் செய்வோம்!"

செம்மொழி தமிழினை
உயர்வுறச் செய்திடும்
திருப்பணி செய்து
மகிழ்ந்திடுவோம்!

ஞானமும் கேள்வியும்
ஞாலத்தில் தழைத்திட
பாரதம் கல்விக்கூடமாய்
திகழ்ந்திடச் செய்வோம்!

விந்தைகள் செய்திடும்
வ்ஞ்ஞானமும் செய்து
வையகத்தாரை
வியந்திடச் செய்வோம்!

பாரத மைந்தர்
ஒற்றுமைக்கொரு
உதாரணமென்று
உணர்ந்திடச் செய்வோம்!

பாரத மகவெனில்
பாரினில் புகழ்ந்திடும்
காரியம் யாவும்
புரிந்திடுவோம்!

உலகே வியக்கும்
உன்னத அன்பினில்
உயர்வுறும் மனிதராய்
திகழ்ந்திடுவோம்!

காலக் கொடுமை!


முன்பெல்லாம்
மணி கேட்டால்...
சூரியனைப் பார்த்து
சொல்வார்கள்...
இப்போது
சீரியலைப் பார்த்து
சொல்கிறார்கள்..!

S.Viswanathan.chennai.

வித்தியாசம்?

போலீசுக்கும்
பொறுக்கிக்கும்
ஒரு வித்தியாசம்தான்
"அடிதடி" செஞ்சா பொறுக்கி...
தடியடி செஞ்சா போலீஸ்...

S.Devarajan.Karur.

Sunday, January 14, 2007

உழவர் திருநாள்!




உழைப்பின் பெருமைதனையும்,
உழவின் பெருமைதனையும்,
உலகினிற்கு உணர்த்தும்
உயர்திரு நன்னாளாம்...
உழவர் திரு நாளதனில்...
உலகமெங்கும் சமத்துவத்தின்
உவகை பூக்கும் சகோதரத்துவத்தில்
உள்ளார்ந்த் நிறைவுடன்
உதிக்கும் பொழுதுகளெல்லாம்
உழைப்பின் உற்சாகத்தில்
உயர்வுற்று சிறக்க,
உயர்நெறிதனில் வாழ்ந்திட
உறுதி கொள்வோம்!

Saturday, January 13, 2007

காணோம்..!

தூயவர்கள்
கோயிலுக்கு போன போது
துயரங்கள்
காணாமல் போயின...
தீயவர்கள்
போன போதோ...
கடவுளே...
காணாமல் போனார்!

இடம்...


நேற்றுவரை...
என் இதயத்தில்...
யாருக்கும் இடம் இல்லை..!
இன்று...
என் இதயமே...
என்னிடம் இல்லை

.

உறுதி..!


பாறையில் உறுதியிருந்தால்தான்...
மலைகளுக்குப் பெருமை!
மனதில் உறுதியிருந்தால்தான்...
மனிதனுக்குப் பெருமை!

காதல்...?


காணும் பெண்களிடமெல்லாம்
தோன்றுவதா?
கண்ட பெண்களிடமும்
தோன்றுவதா?
தோன்றி மறைவதா?
அல்லது...
தோன்றாமலே மறைவதா?
மறைந்தே இருப்பதா?
அல்லது
மறைத்தே வைக்கப்படுவதா?

சுமை!


மூட்டை சுமந்து
கஷ்டப்படக்கூடாதென்று
பள்ளிக்கு அனுப்பினார்
தந்தை...
பாவம் குழந்தை
பள்ளிக்கும் (புத்தக)
மூட்டையுடன் தான்
செல்கிறது..!

ட்ராபிக் ஜாம்...


நூறு அடி ரோட்டை கடக்கவும்
ஆறு மணி நேரம் ஆகச்செய்யும்
தவிர்க்க இயலா தண்டனை!

தீப ஒளி ஏற்றுவோம்!


*அல்லதை தீய்த்து
நல்லதை நிலை நாட்ட
பிரகாசமாக
தீப ஒளி ஏற்றுவோம்!
*உள்ளதைக் கொண்டு
நல்லறத்தோடு-இல்லாரும்
மகிழ்வுறச்செய்து
இன்ப ஒளி ஏற்றுவோம்!
*பாவ இருளை தகர்த்து
நம்பிக்கை ஒளியினை
புதுப்பித்துக்கொண்டு
புத்துணர்வுடன்
ஞான தீப ஒளி ஏற்றுவோம்!

புத்தாண்டில்...



மனித நேயத்தின்...
மகத்துவத்தில்...
உயர்வளிக்கும்...
சமத்துவத்தில்...
ஒருங்கிணைந்த...
உழைப்பில்...
சகோதரத்துவத்தின்...
மகிழ்ச்சியில்...
புதிய சரித்திரம் படைக்க...
முயற்சிப்போம்...
பிறக்கும் இனிய புத்தாண்டில்..!
(2007)
"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"
********************************
நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.
********************************

மழலையின் சிரிப்பில்...!



ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாம்...
மழலையின் சிரிப்பில்
சொர்க்கத்தைக் காணலாம்!
நிலவு தோன்றினால்
குளிர்ச்சி தோன்றும்...
மழலை தோன்றினால்
மகிழ்ச்சி தோன்றும்!
கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்...
மழலையின் தரிசனம்
மாறாத ஆனந்தம்!
பூக்கள் மலர்ந்தால்
புவி மலரும்...
மழலைகள் மலர்ந்தால்
மனிதம் தழைக்கும்!
பூக்கும் மலர்களை நிலவுக்கு சூட்டுவோம்!
பூத்த மழலைகளை
வாழ்த்தி போற்றுவோம்!

Wednesday, January 10, 2007

ஷாஜகான்கள்!


எல்லா ஷாஜகான்களும்
தயாராகத்தான்
இருக்கிறார்கள்...
ஒரு தாஜ்மஹாலை கட்டுவதற்கு...
ஆனால் மும்தாஜ்கள்
நல்ல வசதியான
இன்ஜீனியர்களை
தேடிக்கொண்டு
இருக்கிறார்கள்
கட்டுவதற்கு..!