Thursday, April 12, 2007

கவிதையா?

கண்ணில் தோன்றும் காட்சியெல்லாம்
கவிதையாக்கத்தோன்றும்..
ஆயினும் உணர்வின் பதிவுகள் மட்டுமே..
கவிதையாகத்தோன்றும்!

விவாதங்கள் பலநேரங்களில்
வெட்டியாகத்தோன்றும்..,
விவாதமில்லா கருத்துக்கு..
வெற்றி எங்கே தோன்றும்?

நல்ல கருத்துகள் பல நேரங்களில்
கண்டு கொள்ளப்படாமல் போகும்...
ஆயினும் வலிமையான கருத்துகள்
என்றும் நிலைத்து நிற்கும்!

No comments: