Thursday, May 31, 2007

காப்பாத்து...

குளத்திலும் கிணற்றடியிலும்
தாராளமாக குளித்ததாக
பாட்டி சொல்லியிருக்கா...
மூன்று குடம் தண்ணீர் விட்டு
முழுதாக குளித்ததாக
அம்மா சொல்லியிருக்கா...
இப்படிச் சொல்லிய...
இருவரும்...
என்னைக் குளிப்பாட்ட
ஒரு சிறிய சில்வர் அடுக்கு
தண்ணீருக்கே..
போராட வேண்டியிருக்கிறதாம்..
மூன்றாம் உலகப்போரும் வரலாமாம்
தண்ணீருக்காக...
கடவுளே...வாழ்வின் அடிப்படை ஆதாரமான
தண்ணீரை பாதுகாக்க வேண்டிய..
அறிவினை மனிதருக்கு வழங்கி..
தண்ணீர் கஷ்டம் வராமல் காப்பாத்து..!

Tuesday, May 29, 2007

அட இன்னும் ஒரு கவிதை எழுதுங்களேன்...

இந்த படத்துக்கு ஒரு கவிதை எழுதுங்களேன்...

சுய சம்பாத்தியம்

படிக்கும் போதும் -படித்து

முடித்துவிட்ட போதும்..
அப்பாவை வருத்தி வாங்கிய - காசில்
வாங்கிய பொருட்களில்...
கிடைக்காத சந்தோஷமும்,
நிம்மதியும் முதன் முறையாக
வாங்கிய மாதச் சம்பளத்தில்..
குடித்த டீயில் கிடைத்த்து..!

Friday, May 25, 2007

காவல்தெய்வ மாகிவிட்டாய்..



(இறப்பிலும் பிரியா காதல் ஜோடியில் ஒன்று இறக்குமென்றால்
இன்னொன்றின் நிலை இது)

காவல்தெய்வமாகிவிட்டாய்... நீ
ஆனாலும்
காப்பதற்கு என்னை வைத்தாய்...
காத்திருந்தேன் காதலையும்
காலத்தையும்..
காத்திருக்கிறேன்... இப்போதும்..
ஆனாலும்...
காலனுடன் கொண்ட கூட்டணியால்
காவல் தெய்வமாகிவிட்டாய்..நீ

Monday, May 21, 2007

கவிதை மாதிரி...

கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சேனுங்க...

எல்லா மனிதர்களுக்கும்
உணவு தேவைகளுக்கு
தன்னையே களமாக்கி
உருவாக்கிக் கொடுக்கும்
பேதமறியாத ...

பூமித்தாய்!

நகைச்சுவை(ங்க...)!

இது கொஞ்சம் புதுசுங்க...
சுட்டது மாதிரிதான் ஆனாலும் எஃப்.எம்.ரேடியோவில் கேட்ட ஒரு விஷயத்தின் உருமாற்றம்...
ஒரு பையன் அப்பகிட்ட வந்து மார்ஷீட்டைக் காட்டினான்.
அதைப் பார்த்த அப்பா"என்னடா இது வெறும் 10 மார்க்தான் வாங்கியிருக்கே"ன்னு கோபமா கேட்டாருங்க..
அதுக்கு அந்தப் பையன்
"இந்த மாதிரியெல்லாம் மாத்தி மாத்தி பேசாதீங்கப்பா..
போனவாட்டி 25 மார்க் எடுத்தப்போ என்ன சொன்னீங்க?"
"என்ன சொன்னேன்? ம் இன்னும் 10 மார்க் எடுத்திருந்தா பாஸ் ஆகியிருக்கலாம்னு சொன்னேன். அதுக்க்கென்ன இப்போ?"
"அப்படி சொல்லிட்டு இப்ப மாத்தி பேசலாமா அப்ப எடுக்க வேண்டிய 10 மார்க்கைதான் இப்போ எடுத்திருக்கேன்.அதுக்கு பாராட்டாம திட்டறீங்களே இது நியாயமா"ன்னு கேட்டான்
ஆடிப்போயிட்டாரு அப்பா பையனின் புத்திசாலித்தனத்தில்..

(இதுவும் புதுசுங்கோ:பறக்கும் விமானத்தின்மேல் உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்)



Thursday, May 17, 2007

கவிதை கிடைச்சிடுச்சிங்கோ....

ஒரு படத்துக்கு 14 கவிதை கிடைச்சுதுங்கோ எப்படி இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கோ..!

இந்த படத்துக்கு கவிதை கேட்டதுக்கு பல நண்பர்கள் எழுதி குவிச்சிட்டாங்க... கலக்கலா...
1.ஷாரா
தூது
நீந்தத் தெரியாதவனுக்கு நீச்சல் கற்றுக் கொடு மீனே
கவிதை தெரியாதவனுக்கு கவிதை கற்றுக்கொடு கண்ணே
ரசிக்கத் தெரியாதவனுக்கு ரசிக்கக் கற்றுக்கொடு ரம்பையே
பறக்கத் தெரியாதவனுக்கு பறக்கக் கற்றுக்கொடு பாவையே

நீ மேகத்தைத் தூதுவிடுகிறாயா?
இல்லை பறவையைத் தூதுவிடுகிறாயா? - எனக்குத் தெரியாது.

மொத்தத்தில் உன்னுடைய காதலைத் தூதுவிடத்தானே தேடுகிறாய் தோழியை.
அவளிடம் சொல்லிவிடு - உன் காதலன் நான் இல்லையென்று.
ஏனெனில் எனக்குக் காதல் தோல்வியென்பது பிடிக்காது...

2.ராகினி
நிலா


மெல்லிய காற்றின் ஓசையில்

மொளனாய்போன என் உணர்வுகளை

நீ.. தீண்டிப்பார்க்கும் போது.

ஒவ்வொரு பகுலும் இரவாகிப் போயின.


எதிர் பார்ப்புடன் காத்திருக்க

வைக்கின்றது.

உன் காதல் கருணை அன்பு
நினைவில் நிறுத்தி வைத்திரு

உன் இதயத்திலும்

உன் இதயத்தை வருடும்

சட்டை பையிலும்
அப்போது உன் இயத்தை

நான்முத்தமிட்டு கொண்டே இருப்பேன்.


தனிமையில் தத்தலித்த நேரங்கள்

பொசுங்கி இன்று இரு ஜீவன்..

ஓன்றாகிப்போன

நாட்கள் கண்டுகொண்டேன்
நிலவாக வந்த போது.

3. வசந்த்
கேள்விகளால்...!
----------------------
மேக நுனிகளை
நனைத்துப் பெய்யும்
வெயிலின் சூடு பரவுகின்ற
நீரின் மேல் கிடந்திருக்கும்
நின் மென்னுடலின் விரல் தீண்டும்
வெண் புறாவைப் போல்
என் மனம் உனை நாடி வந்தது
என்று நான் கூறுகையில், மறுத்து,
நுரைத்து நுரைத்து பாய்ந்து வந்து,
அரித்து, அரித்துக் கரையைத் தன்னுள்
கரைத்துக் கரைத்துச்
செல்லும் அலை போலவும்,
மலையைச் சூழ்ந்த நீர்க்கடலா,
கடலில் முளைத்த நீள்மலையா
என்றுணரா நிலை போலவும்,
உள்ளதென்று நீ சொன்னதை திருத்தி,
நாணத்தால் சரிந்த வனமா,
நாரைகள் பறக்கும் வானமா என்று நான் கேட்ட,
கேள்விகளால் நிரம்பி வழிகின்றது நம் காதல்.

4.அன்புக்கவி(அன்புடன் குழுமம்)
முகில் விடு தூது
===============

சுவர்க்கத்தில் நீயும் நானும் தான் ..
அட இங்கேயும் போட்டியா
மேகமும் மோகம் கொண்டு
தூதனுப்புகிறதே வரிசையாய்
நான்கு பறவை மடல்களை

கண்ணே திருப்பி அனுப்பி விடு
அழட்டும் அந்த மேகம்
நமக்கும் மழை கிடைக்குமே

தண்ணீரில் தத்தளிக்கும் தாமரை என்று
இன்னும் என்னன்ன உன்னை நாடி வருமோ
வா வா வந்து விடு பெண்ணே

5.தூது
====
வெட்கத்தில் மேகத்தின் பின்னொளிந்த
கதிரவன் அனுப்பிய வெண்புறா
தூது!
"தாமதிக்காமல் குளித்து செல்
பெண்ணே!
தாவரங்கள் பச்சையம் தயாரிக்க
என் ஒளி வேண்டுமாம்!! "
பொடியன்,
\லோகி/

6.!அராதா...!!!
பித்தன்
---------

கடல் நீர்
குடி நீராகும்
உந்தன் குளியலால்...

அந்த பறவை
அன்னப் பறவையாகும்
உந்தன் விரல் தீண்டினால்...

நானோ
பித்தனாகிப் போவேன்
இக்கோலத்தில்
உனைக் கண்டால்...!

7. படம் தங்களுடையது, கவிதை என்னுடையது, இதோ இங்கே...


கிளை

நான் நீரில் நீந்துகையில்
கிளை என்று எண்ணி

அமர வந்தாயோ
என் கையில்...


தத்துபித்துக் கவிதை... வளர்வதற்க்கான முயற்ச்சி...

மகிழ்ச்சியுடன்,
தீபா சத்யா!


8.Siva siva(முத்தமிழ் குழுமம்)
2007-05-14
(கடலில் நீந்தும் பெண்ணின் மேல் ஒரு கடற்புறா பறந்து நெருங்கும் படத்திற்கு எழுதியது)

வண்ண மீன்களுடன் மகிழ்ந்திட வந்து
தண்ணீர்ப் படுக்கையிலே தவழ்கிற என்றன்
கண்ணே
! வந்துவிடு
கடற்புறா வந்துன்
கண்ணை மீனென்று கவர்வதன் முன்னே
!

அன்புடன்
,
வி. சுப்பிரமணியன்

9.Kamal rajan

மனமுடைந்து தற்கொலை செய்யும்
மங்கையை காப்பாற்ற கை கொடுத்தேன்..
பிறகுதான் தெரிந்தது அவள் வெயில் கொடுமை
தாங்காமல் தண்ணிரில் இருக்கிறாள் என்று..
நானும் இறங்கிவிட்டேன்..
வெயில் கொடுமை தணிக்க அல்ல..
வழியும் அசடை தண்ணிரில் கலக்க.. :))
கவிதை மாதிரி தெரியலை.. சும்மா நகைச்சுவைக்காக எழுதியது..

10.Kishore kumar(தமிழ் நண்பர்கள் குழுமம்)
அந்த பறவைக்கு தான் என்ன ஒரு பாக்கியம்
உன்னை தொட்டு விட்டது
இதே பாக்கியம் எனக்கும் கிடைக்கும் என்றால்
அடுத்த பிறவிலாவது பறவையாக பிறக்க வேண்டும் நான்...

11.Esaki muthu
என்ன செயல் இது பெண்ணே,
ஆற்றில் இறங்கி சூட்டை தணிக்கின்றாய்
என்னை சூடேற்றிவிட்டு!!!

12.ranjan ram
உன்னை கண்டநாள்முதல் என் மனம்
என்னிடம் இல்லை..........கள்ளி
களவாடி வந்து இங்கு உல்லாசமாகவாயிருக்கிறாய்....
இது கவிதையோ அல்லது உங்கள் தலை எழுத்தோ தெரியாது......
என்னை மன்னிக்கவும் ஏதேனும் பிழையிருந்தால்...சுட்டிக் காட்டவும்

13.Kishore kumar

நன்றாக தான் நீந்துகிறாய் நீ
எனக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் தானோ
இன்னும் உன் நினைவுகளிலிருந்து
மீளமுடியாமல் தத்தளித்துக் கொண்டுக் இருக்கிறேனோ...
உயிரே எழுந்து வா!
------------------------------------
14.
வாழவரும் வாலிபத்தை
வாசலிலே விட்டுவிட்டு
என்னுயிர் பெறவில்லையென்று - நீ
உன்னுயிர் துறக்கிறியா!

*

காலமெல்லாம் உந்தன்மடி
கண்களோடு மூடிக்கடி
சொன்ன நானும் வேறு பெண்னை
மணந்ததெண்ணி மூழ்குறியா!

*

ஓடி ஓடி ஒளிஞ்ச இடம்
ஓண்ணு மண்ணா இருந்த இடம்
ஒத்த இடம் சுத்த இடம் - உன்
ஒருத்திக்கென்றே வச்ச இடம்
ஒழிஞ்சே போச்சதுன்னு
ஓடைக்குள்ள ஒடுங்குறியா!

*

காலமெல்லாம் காத்து நிற்பேன்
கண்ணுக்குள்ளே பொத்திவைப்பேன்
காளிமுன்னே சொன்னதால
காலனையே அனுப்பிடுவான்னு
கண்மணியே எனக்காக
கம்மாக்குள்ள கலக்குறியா!

*

உன்னவிட ஊருக்குள்ள
உத்தமியோ எவளுமில்ல
சத்தியமா ஒன்ன விட - என்
சரிபாதி எவளுமில்ல - நான்
சொன்ன சொல்லு தண்ணியிலன்னு
தண்ணிக்குள்ள முடிக்கிறியா!

*

உழுதுழுது உயிர் இளைத்து
உடல் வேர்வை சிந்த உவந்துழைத்து - என
ஊர்த்தலைவர்னு சொன்னசனம் - தினம்
ஊண்புண்ணாப் போன சனம்

காலமேகம் பொய்ச்சுப்புட்டான்
கழனியையும் குடிச்சிப்புட்டான்
கரிசப்பட்டி தலைவர்மக
வயசுக்கு வந்துப்புட்டா- அவள
கல்யாணம் செஞ்சா நாங்க
களியாவது சாப்பிடுவோம்னு - அந்த
சனப்பய பேச்சக் கேட்டு - எங்குல
சாமியையே சாச்சிபுட்டேன்!

*

அடுத்தூரு தண்ணிவர
அடுத்தவன் பசிதீர
நெல்லு நனைய நானும்
நெஞ்சின் ஈரம் எடுத்து வெச்சேன்!

*

என்னுசுருக் கூட்டுக்குள்ள
உன்னுசுரு இருக்குதடி
உன்னுசுருக் கூட்டுக்குள்ள
என்னுசுரு இருக்குமடி

மறந்தாப்புல மாய்ச்சுக்கிட்டு
கொலை ஒண்ணு செஞ்சிராத
மண்ணுல இருக்கும் வர
என்னை சிலுவைல அறைஞ்சிராத!

*

வெள்ளிப் புறா காலில் வெச்சு
உசுரத் தூது அனுப்பியிருக்கேன்
சுட்டுவிரல் தொட்டெழுந்து
சூரியனே வந்துவிடு
வட்டமுகம் பாக்கணுமே - என்
வானவில்லே வந்துவிடு!

*

நீ என்ன வார்த்தை சொன்னாலும் - கொஞ்சம்
உயிரோடு எழுந்து போவேன்
மன்னிச்சேன்னு சொல்லிராத - கண்ணே
மறுகணமே மரித்துப்போவேன்

- தாவணி (முகுந்தன்)

அன்புடனில் என் முதல் பதிவு!

Monday, May 14, 2007

ஜோக் சொல்லப்போறேன்-8

ஒரு பள்ளிகூடத்தில்... ஒரு மாணவன் பையிலிருந்து பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்தான்.குடிக்கும் போது வாயில் வைத்து எச்சில் படுத்தி குடித்தான், அதைப் பார்த்த ஆசிரியர்,

"தம்பி எச்சில் பண்ணி குடிக்ககூடாது அண்ணாந்துதான் குடிக்கணும் அதுதான் நல்ல பழக்கம்"என்றார்
அதற்கு அந்த மாணவன்,
"நீங்க சொல்றது சரிதான் சார் ஆனாலும் இப்படி குடிப்பதில் ஒரு நன்மை இருக்கு!"
என்றான்.
ஒன்றும் புரியாத ஆசிரியர்,
"நன்மையா? என்ன நன்மை?"
என்று கேட்டார்.

"குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுன்னு யாரும் கேக்க மாட்டாங்க பாருங்க"
என்று சொன்னதும் அதிர்ந்து போனார் ஆசிரியர் .

நண்பா !

நண்பா!
நீ இருப்பதானால்
நான் வருந்துவதில்லை
எதற்கும்...
எனக்கு எல்லாம் வல்ல
ஒரு சகோதரன் இருப்பதாக..

Sunday, May 13, 2007

எனக்கு வராத எஸ்.எம்.எஸ்.-2

முதலில் சொன்னது போலவே இது தோணினாலும்... இது வேற நிஜமான கற்பனைங்க.

எனக்கு வராத எஸ்.எம்.எஸ்.
------------------------------------
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
என்ன... தேடறீங்க..?
அதான் தலைப்பிலேயே போட்டிருக்கேனே...
வராத எஸ்.எம்.எஸுன்னு...
ஹி... ஹி...

எனக்கு வராத எஸ்.எம்.எஸ். -1

பொதுவாக ஒருவர் அனுப்பும் எஸ்.எம்.எஸ். வந்து விடுவதுதான் வழக்கம்.
ஆனா எனக்கு ஒருவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ். வரவேயில்லீங்க...
அது ஏன்? காரணம் தெரிஞ்சவங்க சொல்லுங்க....
சரி வராத மெஸேஜ் என்னன்னு சொல்லணுமில்ல...

என் மீது ரொம்ப அக்கறையுள்ள ஒரு ஜீவன் எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக சொன்னதும் என்னவாக இருக்கும்னு நான் நினைச்சது அப்படியே இருந்தது அவங்க சொன்னபோது!!!!!!

மெஸேஜ்:
கவனமாக இருக்கவும்!
உடல் நலனை கவனித்துக் கொள்ளவும்.
நேரத்துக்கு சாப்பிடவும்.
நேரத்துக்கு உறங்கவும்.
நல்ல இசை கேட்கவும்.

இதாங்க அது
அது எப்படிங்க நான் நினைச்சதே அவங்களும் சொன்னாங்க?

சரி
அந்த அவங்க யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?


சாரி அதுதான் சஸ்பென்ஸ்.
அவங்க விருப்பப்பட்டா அப்புறம் தனி பதிவா போடறேன் சரியா?

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

ஆசைப்பட்ட
எல்லாத்தையும்

காசிருந்தா
வாங்கலாம்...

அம்மாவை
வாங்க முடியுமா...

அன்பை வாங்க முடியுமா...

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Thursday, May 10, 2007

கூகிளின் புதிய தமிழ் குழுமம் - தமிழ் பிரவாகம்

சும்மா ஒரு விசிட் பண்ணி பாருங்க
http://groups.google.com/group/Piravakam?hl=en

Wednesday, May 9, 2007

இந்த டான்ஸுக்கு பாட்டெழுத முடியுமா?

காதலியே...


தெருக்குழாயில்
நீர் வரும்போதெல்லாம்
என் இதயம் துளிர்க்கும்
நீயும் வருவாயென...
நீர் சுமந்து நீ இடறினால்
என் இதயம் துடிக்கும்
உனக்கு வலிக்குமென...
உனக்குத் தெரியுமா?
நீ வராத இரு நாட்களில்
குழாய் நீரும் குழம்பியிருந்தது
என்னைப் போலவே...
எவர் எதிர்த்தாலும் பரவாயில்லை
தயவு செய்து- நீ மட்டும்
நிறுத்தி விடாதே!
நீர் சுமப்பதையும்...
நான் சுவாசிப்பதையும்...

Tuesday, May 8, 2007

உன் வாழ்வு..!

செயலினைக் கொண்டே
மதிக்கப்படும்
உன் வாழ்வு..!
வாழும் போதும்
வாழ்க்கைக்குப் பின்னும்...

Sunday, May 6, 2007

அட நீங்களும்தான் கவிதை எழுதுங்களேன்...


சும்மா ஒரு முயற்சியா... இந்த படத்துக்கு கவிதை எழுதுங்களேன்.

மறந்தேன்...

மறந்தேன் என்றே
நினைத்தாயோ..?
றப்பேன் என்றே
நினைத்தாயோ..?-உன்னை
மறுப்பேன் என்றே
நினைத்தாயோ..?
அல்லது மறக்காமல்தான் -என்னை
நினைத்தாயோ..?

இதயத்தில்...

இதயத்தில் விழுகின்றன
சம்மட்டி அடிகளாய்
உன் சூடான சொற்கள்

எல்லா பிறப்பிலும்...

நீ காட்டும் அன்புக்கு
நிகரில்லை எதுவும்
இவ்வுலகில்..
நீயே அன்னையாய்
அமைந்திட வேண்டும்
எல்லா பிறப்பிலும்...

Friday, May 4, 2007

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

கொஞ்சம் வித்தியாசமா...

தாயிற்சிறந்த கோயிலுமில்லை...
தந்தை சொல் மிக்க மந்திரமில்ல..
ஆயினும் எப்பொழுதும் தந்தை ஏன்
தாயின் நாமத்தை உச்சரிக்கிறார்
விடாமல் நச்சரிக்கிறார்...
அன்பால் அர்ச்சிக்கிறார்...
தந்தையும் தாயினுள் அடக்கம் என்பதாலோ?


********
தந்தைக்கு தலைச்சன்
தாய்க்கு இளையோன்
தவிர்க்காமல்
கொள்ளி போடணும்...
என்று சிலர் சொன்னதாக
கா(த்)தோரச் செய்தி கேட்டேன்
ஆயினும்...
அப்பா! அவசரப்பட்டு...
இறந்து விடாதீர்கள்..!
இறுதிக்கடமையை செய்ய...
நான் வந்து விடுகிறேன்!
வந்தவுடன் உயில் எழுதிவிடலாம்...
என்கிற பாசம் மகனுக்கு வருவது...
தந்தை செலுத்தியதற்கு பிரதி பலன்.
********
மாற்றாந்தாயென்றால்
சித்தியென்றுதான்
கேள்விப்பட்டோம்
அந்த சித்திகளுக்குத்தான் வரும்
மாற்றாந்தாய் மனப்பான்மை
சொந்தத் தாய்க்கு
மாற்றாந்தாய் மனப்பான்மை
உள்ளதாக கேள்விப்பட்டதில்லை..
அந்த சித்திகள் (மாற்றாந்தாய்கள்) உருவாக
காரணமாக இருப்பவர் ஒரு தந்தைதான்
சோ தந்தையை விட தாயே உயர்ந்தவர்
********

Thursday, May 3, 2007

தாய் மனமே...

தாய் மனமே...
ஈடு இணையில்லா...
அன்பின் வடிவம்!
மாற்றுக்குறையா...
கருணையின் ஊற்று!
அலுத்துக் கொள்ளாத...
சேவையின் சிகரம்!

Tuesday, May 1, 2007

உழைப்பே உயர்வுக்கு வழி!