Thursday, May 17, 2007

கவிதை கிடைச்சிடுச்சிங்கோ....

ஒரு படத்துக்கு 14 கவிதை கிடைச்சுதுங்கோ எப்படி இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கோ..!

இந்த படத்துக்கு கவிதை கேட்டதுக்கு பல நண்பர்கள் எழுதி குவிச்சிட்டாங்க... கலக்கலா...
1.ஷாரா
தூது
நீந்தத் தெரியாதவனுக்கு நீச்சல் கற்றுக் கொடு மீனே
கவிதை தெரியாதவனுக்கு கவிதை கற்றுக்கொடு கண்ணே
ரசிக்கத் தெரியாதவனுக்கு ரசிக்கக் கற்றுக்கொடு ரம்பையே
பறக்கத் தெரியாதவனுக்கு பறக்கக் கற்றுக்கொடு பாவையே

நீ மேகத்தைத் தூதுவிடுகிறாயா?
இல்லை பறவையைத் தூதுவிடுகிறாயா? - எனக்குத் தெரியாது.

மொத்தத்தில் உன்னுடைய காதலைத் தூதுவிடத்தானே தேடுகிறாய் தோழியை.
அவளிடம் சொல்லிவிடு - உன் காதலன் நான் இல்லையென்று.
ஏனெனில் எனக்குக் காதல் தோல்வியென்பது பிடிக்காது...

2.ராகினி
நிலா


மெல்லிய காற்றின் ஓசையில்

மொளனாய்போன என் உணர்வுகளை

நீ.. தீண்டிப்பார்க்கும் போது.

ஒவ்வொரு பகுலும் இரவாகிப் போயின.


எதிர் பார்ப்புடன் காத்திருக்க

வைக்கின்றது.

உன் காதல் கருணை அன்பு
நினைவில் நிறுத்தி வைத்திரு

உன் இதயத்திலும்

உன் இதயத்தை வருடும்

சட்டை பையிலும்
அப்போது உன் இயத்தை

நான்முத்தமிட்டு கொண்டே இருப்பேன்.


தனிமையில் தத்தலித்த நேரங்கள்

பொசுங்கி இன்று இரு ஜீவன்..

ஓன்றாகிப்போன

நாட்கள் கண்டுகொண்டேன்
நிலவாக வந்த போது.

3. வசந்த்
கேள்விகளால்...!
----------------------
மேக நுனிகளை
நனைத்துப் பெய்யும்
வெயிலின் சூடு பரவுகின்ற
நீரின் மேல் கிடந்திருக்கும்
நின் மென்னுடலின் விரல் தீண்டும்
வெண் புறாவைப் போல்
என் மனம் உனை நாடி வந்தது
என்று நான் கூறுகையில், மறுத்து,
நுரைத்து நுரைத்து பாய்ந்து வந்து,
அரித்து, அரித்துக் கரையைத் தன்னுள்
கரைத்துக் கரைத்துச்
செல்லும் அலை போலவும்,
மலையைச் சூழ்ந்த நீர்க்கடலா,
கடலில் முளைத்த நீள்மலையா
என்றுணரா நிலை போலவும்,
உள்ளதென்று நீ சொன்னதை திருத்தி,
நாணத்தால் சரிந்த வனமா,
நாரைகள் பறக்கும் வானமா என்று நான் கேட்ட,
கேள்விகளால் நிரம்பி வழிகின்றது நம் காதல்.

4.அன்புக்கவி(அன்புடன் குழுமம்)
முகில் விடு தூது
===============

சுவர்க்கத்தில் நீயும் நானும் தான் ..
அட இங்கேயும் போட்டியா
மேகமும் மோகம் கொண்டு
தூதனுப்புகிறதே வரிசையாய்
நான்கு பறவை மடல்களை

கண்ணே திருப்பி அனுப்பி விடு
அழட்டும் அந்த மேகம்
நமக்கும் மழை கிடைக்குமே

தண்ணீரில் தத்தளிக்கும் தாமரை என்று
இன்னும் என்னன்ன உன்னை நாடி வருமோ
வா வா வந்து விடு பெண்ணே

5.தூது
====
வெட்கத்தில் மேகத்தின் பின்னொளிந்த
கதிரவன் அனுப்பிய வெண்புறா
தூது!
"தாமதிக்காமல் குளித்து செல்
பெண்ணே!
தாவரங்கள் பச்சையம் தயாரிக்க
என் ஒளி வேண்டுமாம்!! "
பொடியன்,
\லோகி/

6.!அராதா...!!!
பித்தன்
---------

கடல் நீர்
குடி நீராகும்
உந்தன் குளியலால்...

அந்த பறவை
அன்னப் பறவையாகும்
உந்தன் விரல் தீண்டினால்...

நானோ
பித்தனாகிப் போவேன்
இக்கோலத்தில்
உனைக் கண்டால்...!

7. படம் தங்களுடையது, கவிதை என்னுடையது, இதோ இங்கே...


கிளை

நான் நீரில் நீந்துகையில்
கிளை என்று எண்ணி

அமர வந்தாயோ
என் கையில்...


தத்துபித்துக் கவிதை... வளர்வதற்க்கான முயற்ச்சி...

மகிழ்ச்சியுடன்,
தீபா சத்யா!


8.Siva siva(முத்தமிழ் குழுமம்)
2007-05-14
(கடலில் நீந்தும் பெண்ணின் மேல் ஒரு கடற்புறா பறந்து நெருங்கும் படத்திற்கு எழுதியது)

வண்ண மீன்களுடன் மகிழ்ந்திட வந்து
தண்ணீர்ப் படுக்கையிலே தவழ்கிற என்றன்
கண்ணே
! வந்துவிடு
கடற்புறா வந்துன்
கண்ணை மீனென்று கவர்வதன் முன்னே
!

அன்புடன்
,
வி. சுப்பிரமணியன்

9.Kamal rajan

மனமுடைந்து தற்கொலை செய்யும்
மங்கையை காப்பாற்ற கை கொடுத்தேன்..
பிறகுதான் தெரிந்தது அவள் வெயில் கொடுமை
தாங்காமல் தண்ணிரில் இருக்கிறாள் என்று..
நானும் இறங்கிவிட்டேன்..
வெயில் கொடுமை தணிக்க அல்ல..
வழியும் அசடை தண்ணிரில் கலக்க.. :))
கவிதை மாதிரி தெரியலை.. சும்மா நகைச்சுவைக்காக எழுதியது..

10.Kishore kumar(தமிழ் நண்பர்கள் குழுமம்)
அந்த பறவைக்கு தான் என்ன ஒரு பாக்கியம்
உன்னை தொட்டு விட்டது
இதே பாக்கியம் எனக்கும் கிடைக்கும் என்றால்
அடுத்த பிறவிலாவது பறவையாக பிறக்க வேண்டும் நான்...

11.Esaki muthu
என்ன செயல் இது பெண்ணே,
ஆற்றில் இறங்கி சூட்டை தணிக்கின்றாய்
என்னை சூடேற்றிவிட்டு!!!

12.ranjan ram
உன்னை கண்டநாள்முதல் என் மனம்
என்னிடம் இல்லை..........கள்ளி
களவாடி வந்து இங்கு உல்லாசமாகவாயிருக்கிறாய்....
இது கவிதையோ அல்லது உங்கள் தலை எழுத்தோ தெரியாது......
என்னை மன்னிக்கவும் ஏதேனும் பிழையிருந்தால்...சுட்டிக் காட்டவும்

13.Kishore kumar

நன்றாக தான் நீந்துகிறாய் நீ
எனக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் தானோ
இன்னும் உன் நினைவுகளிலிருந்து
மீளமுடியாமல் தத்தளித்துக் கொண்டுக் இருக்கிறேனோ...
உயிரே எழுந்து வா!
------------------------------------
14.
வாழவரும் வாலிபத்தை
வாசலிலே விட்டுவிட்டு
என்னுயிர் பெறவில்லையென்று - நீ
உன்னுயிர் துறக்கிறியா!

*

காலமெல்லாம் உந்தன்மடி
கண்களோடு மூடிக்கடி
சொன்ன நானும் வேறு பெண்னை
மணந்ததெண்ணி மூழ்குறியா!

*

ஓடி ஓடி ஒளிஞ்ச இடம்
ஓண்ணு மண்ணா இருந்த இடம்
ஒத்த இடம் சுத்த இடம் - உன்
ஒருத்திக்கென்றே வச்ச இடம்
ஒழிஞ்சே போச்சதுன்னு
ஓடைக்குள்ள ஒடுங்குறியா!

*

காலமெல்லாம் காத்து நிற்பேன்
கண்ணுக்குள்ளே பொத்திவைப்பேன்
காளிமுன்னே சொன்னதால
காலனையே அனுப்பிடுவான்னு
கண்மணியே எனக்காக
கம்மாக்குள்ள கலக்குறியா!

*

உன்னவிட ஊருக்குள்ள
உத்தமியோ எவளுமில்ல
சத்தியமா ஒன்ன விட - என்
சரிபாதி எவளுமில்ல - நான்
சொன்ன சொல்லு தண்ணியிலன்னு
தண்ணிக்குள்ள முடிக்கிறியா!

*

உழுதுழுது உயிர் இளைத்து
உடல் வேர்வை சிந்த உவந்துழைத்து - என
ஊர்த்தலைவர்னு சொன்னசனம் - தினம்
ஊண்புண்ணாப் போன சனம்

காலமேகம் பொய்ச்சுப்புட்டான்
கழனியையும் குடிச்சிப்புட்டான்
கரிசப்பட்டி தலைவர்மக
வயசுக்கு வந்துப்புட்டா- அவள
கல்யாணம் செஞ்சா நாங்க
களியாவது சாப்பிடுவோம்னு - அந்த
சனப்பய பேச்சக் கேட்டு - எங்குல
சாமியையே சாச்சிபுட்டேன்!

*

அடுத்தூரு தண்ணிவர
அடுத்தவன் பசிதீர
நெல்லு நனைய நானும்
நெஞ்சின் ஈரம் எடுத்து வெச்சேன்!

*

என்னுசுருக் கூட்டுக்குள்ள
உன்னுசுரு இருக்குதடி
உன்னுசுருக் கூட்டுக்குள்ள
என்னுசுரு இருக்குமடி

மறந்தாப்புல மாய்ச்சுக்கிட்டு
கொலை ஒண்ணு செஞ்சிராத
மண்ணுல இருக்கும் வர
என்னை சிலுவைல அறைஞ்சிராத!

*

வெள்ளிப் புறா காலில் வெச்சு
உசுரத் தூது அனுப்பியிருக்கேன்
சுட்டுவிரல் தொட்டெழுந்து
சூரியனே வந்துவிடு
வட்டமுகம் பாக்கணுமே - என்
வானவில்லே வந்துவிடு!

*

நீ என்ன வார்த்தை சொன்னாலும் - கொஞ்சம்
உயிரோடு எழுந்து போவேன்
மன்னிச்சேன்னு சொல்லிராத - கண்ணே
மறுகணமே மரித்துப்போவேன்

- தாவணி (முகுந்தன்)

அன்புடனில் என் முதல் பதிவு!

9 comments:

Anonymous said...

nagai. s. bala murali kku oru ooooooooohhhhh....poduren..

Balamurali said...

oh

sellam said...

ellorukkum elutha thuundiyathu inthappadam ennum padagkal tharavum eluthipaarpoom
nanri murali

anpudan
rahini

Mukundan said...
This comment has been removed by the author.
Geetha Sambasivam said...

appaadi, blog thirakkavee neram edukkuthe! super kavithaikaL. en kelvikku enna pathil?

Mukundan said...

அழகா தொகுத்து இருக்கீங்க பாலமுருகன், அதற்கு ஒரு ஓ... போட்டுற்றோம்.
நன்றி!!!

- முகுந்தன் (தாவணி)

Balamurali said...

மிக்க மகிழ்ச்சி!
ராகினி

Balamurali said...

நன்றி கீதாம்மா!

Balamurali said...

முகுந்தனுக்கும் நன்றி!