Sunday, May 6, 2007

அட நீங்களும்தான் கவிதை எழுதுங்களேன்...


சும்மா ஒரு முயற்சியா... இந்த படத்துக்கு கவிதை எழுதுங்களேன்.

5 comments:

Anonymous said...

IVAL MUGATHIN OLIYIL SOORIYAN MARAINTHATHO!
INTHA PAAL MUGATHAI PARAVAYUM NAADIYATHO!
KOONTHALIN VAASATHAI MEENGALUM ARINTHATHO!
MANATHIN ALATHIL INTHA AZKADALUM THODRATHO!

இரா. வசந்த குமார். said...

மேக நுனிகளை நனைத்துப் பெய்யும் வெயிலின் சூடு பரவுகின்ற நீரின் மேல் கிடந்திருக்கும் நின் மென்னுடலின் விரல் தீண்டும் வெண் புறாவைப் போல் என் மனம் உனை நாடி வந்தது என்று நான் கூறுகையில், மறுத்து, நுரைத்து நுரைத்து பாய்ந்து வந்து, அரித்து, அரித்துக் கரையைத் தன்னுள் கரைத்துக் கரைத்துச் செல்லும் அலை போலவும், மலையைச் சூழ்ந்த நீர்க்கடலா, கடலில் முளைத்த நீள்மலையா என்றுணரா நிலை போலவும், உள்ளதென்று நீ சொன்னதை திருத்தி, நாணத்தால் சரிந்த வனமா, நாரைகள் பறக்கும் வானமா என்று நான் கேட்ட, கேள்விகளால் நிரம்பி வழிகின்றது நம் காதல்.

balamurali sir, can i use this picture and my poem as a post in my blog...?

Balamurali said...

அருமையாக இருக்கிறது அன்பு வசந்த்
படத்தினை தாராளமாக உபயோகித்துக் கொள்ளுங்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி!

Anonymous said...

நீந்தத் தெரியாதவனுக்கு நீச்சல் கற்றுக் கொடு மீனே
கவிதை தெரியாதவனுக்கு கவிதை கற்றுக்கொடு கண்ணே
ரசிக்கத் தெரியாதவனுக்கு ரசிக்கக் கற்றுக்கொடு ரம்பையே
பறக்கத் தெரியாதவனுக்கு பறக்கக் கற்றுக்கொடு பாவையே

நீ மேகத்தைத் தூதுவிடுகிறாயா?
இல்லை பறவையைத் தூதுவிடுகிறாயா? - எனக்குத் தெரியாது.

மொத்தத்தில் உன்னுடைய காதலைத் தூதுவிடத்தானே தேடுகிறாய் தோழியை.
அவளிடம் சொல்லிவிடு - உன் காதலன் நான் இல்லையென்று.
ஏனெனில் எனக்குக் காதல் தோல்வியென்பது பிடிக்காது...

Balamurali said...

ரொம்ப நல்லாருக்கு ஷாரா!