Saturday, December 23, 2006

மறைமலை அடிகளார்

மறைமலை அடிகளார்
***************************

தாய் மொழிக்கென்று
பெரும்பணி செய்து
தமிழ் மொழி தன்னை
உயர்ந்திடச் செய்தீர்!

பெயருக்கென்றே
பேசி விடாமல்
பெயரினைக் கூட
தமிழினில் ஏற்றீர்!

உம்மால் தமிழும்
ஒருங்கே ஊரும்
பெருமிதத்தாலே
உயர்ந்தத்ய்யா!

உவகையில் நானும்
அகமகிழ்கின்றேன்
உமது மண்ணில்
வாழுவதாலே!

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

பிறக்கும் புத்தாண்டில்
கொண்ட லட்சியங்கள்
சாதனைகள் ஆகட்டும்!
நம்பிக்கைகள் வெற்றிகள் ஆகட்டும்!
வெற்றிகள்நிரந்தரம் ஆகட்டும்!
உதிக்கும் 2007-ல்
வெற்றிகளின் துவக்கமாக..
பேரானந்தத்தை மெய்ப்பிக்கும்
சமாதானத்தின் துவக்கமாக
எல்லோரும் நிறைவினைப் பெற்று
எல்லையில்லா சிறப்புடன் வாழ்ந்திட
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

உயர்வு செய்வோம்!

* தாய்மொழி தமிழினை
தழைத்திடச் செய்வோம்!
நாளைய சரித்திரம்
தமிழினில் செய்வோம்!
*உண்மையும், நன்மையும்
உயர்ந்திடச் செய்வோம்!
பொய்மையும், தீமையும்
அழிந்திடச்செய்வோம்!
• கயைமையும், வஞ்சமும்
களைந்திடச்செய்வோம்!
வலிமையில் நெஞ்சினை
உயர்ந்திடச்செய்வோம்!
• வறுமையும், பஞ்சமும்
ஒழிந்திடச்செய்வோம்!
செழுமையில் உலகம்
மகிழ்ந்திடச் செய்வோம்!

Wednesday, December 20, 2006

வாழ்க்கை என்பது...

நாடகம் என்றார் ஒரு சிலர்...
விடுகதை என்றார் ஒர் சிலர்...
தலைவிதி என்றார் ஒரு சிலர்...
வினைப்பயன் என்றார் ஒர் சிலர்...
கவிதை என்றார் ஒரு சிலர்...
கலை நயம் என்றார் ஒரு சிலர்...
புதினம் என்றார் ஒரு சிலர்...
புனிதம் என்றார் ஒரு சிலர்...
புதிரனதென்றார் ஒரு சிலர்...
புண்ணியம் என்றார் ஒரு சிலர்...
கொடுமை என்றார் ஒரு சிலர்...
கடினம் என்றார் ஒரு சிலர்...
வேதனை என்றார் ஒரு சிலர்...
வியாபாரம் என்றார் ஒரு சிலர்...
நம்பிக்கை என்றார் ஒரு சிலர்..
பிரதி பலன் என்றார் ஒரு சிலர்...
புரிய வில்லை என்றார் பெரும்பாலோர்!

மனிதன் மட்டும்...

*கூவும் குயில்கள்
பாராட்டிற்காக
பரிதவிப்பதில்லை...
*பொழியும் மேகம்
புகழுக்காக
ஏங்குவதில்லை...
*இரவும் பகலும்
எந்தப் பலனும்
பார்ப்பதில்லை...
*அலையும் கடலும்
கடமையைச்செய்ய
வருந்துவதில்லை...
*தாவர வகைகள்
தம் உழைப்பிற்கு
விருதுகள்தேடுவதில்லை...
*ஆனால்...
மனிதன் மட்டும்
எதிர் பார்ப்பின்றி
எதையும் செய்ய
முயல்வதில்லை...!

கடைசி ஆசை...!

தாத்தா காலந்தொட்டு...
நூற்றியெட்டு வயதைக் கடந்து...
தன்னைக் கடந்து செல்வோருக்கெல்லாம்
இளைப்பாறுதல் கொடுத்து...
காற்றின் நாதத்திற்கும்...
ஆற்றின் தாளத்திற்கும்
தலையசைத்து,கீத
ம் இசைத்து...
பள்ளிக் குழந்தைகளின்
விளையாட்டுக் களமாகி...
பறவைகளின் உறைவிடமாகி...
விழுதுகளால் -தன் உறுதியினை
பறை சாற்றியஆலமரம்!
புதிய தொழிற்சாலைகட்டுவதற்காக...
வெட்டப்படும் வேளையில்...
தனது கடைசி வேண்டுகோளை
தெரிவித்தது!
"மனிதா!
சுற்றுச்சூழலைகாப்பாற்று!"

ஜாதி..!?

காக்கை குருவியும்...
எங்கள் ஜாதி!
எங்களில் மட்டும்...
ஆயிரம் ஜாதி!?

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வறுமைகளுடன்
வருத்தங்களும் நீங்கி...
வையகம்
மகிழ்வில் திளைக்க...
வருடப் பிறப்போடு
வசந்தமும் பிறக்கட்டும்..!

வறுமையின் இலக்கு...- ஹைக்கூ.

எங்களுக்கும்
இலக்குகள் உண்டு!
ஒரு வேளையேனும்
உண்ண வேண்டுமென்று...

வெற்றியின் விலாசம்..!

விதியென்று சோர்ந்து இராதே...
உன் பார்வையில்...
வீரம் தெரிக்கட்டும்!
மதியை மயங்க விடாதே...
உன் எண்ணத்தில்...
உறுதி இருக்கட்டும்!
மனப்போக்கில்வாழ்ந்து விடாதே...
உன் செயல்களில்ஒழுங்கு இருக்கட்டும்!
உதாரண வாழ்வுஉனதானால்...
வெற்றியின் விலாசம் நீயாவாய்!

லட்சியம்..!

எனக்கும்...
சில நேரங்களில்
லட்சியங்கள் தோன்றும்
பெரிய
எழுத்தாளனாகவேண்டுமென்றும்...
பெரிய
கவிஞனாகவேண்டுமென்றும்...
என்ன செய்வது?
இதோ...
கிளம்பிவிட்டேன்...
காலையில்
வேலைக்குபோனால் தானே
நாளைக்கு சாப்பிட முடியும்..!
***************************
Nagai.S.Balamurali.Chennai.
***************************