கவிதை மாதிரி...3
செவ்வாயில்
தோஷம் இருந்தாலும்
முயற்சியிருந்தால்
செவ்வாய்க்கே
போய் வரலாம்..
:))
செவ்வாயில்
தோஷம் இருந்தாலும்
முயற்சியிருந்தால்
செவ்வாய்க்கே
போய் வரலாம்..
:))
Posted by Balamurali at 5:17 PM 2 comments
Labels: கவிதை மாதிரி...
நிறுத்தி வைத்தாய்...
சிலகாலங்கள்
சந்திப்பதையும்...
உரையாடுவதையும்...
ஆனாலும் எப்படி
சாத்தியமானது?
நினைப்பதையும் கூட
நிறுத்தி வைக்க...
Posted by Balamurali at 4:02 PM 3 comments
Labels: கவிதைகள்
நோய்களில்
சுகம் தரும் நோய்
காதல்...
நோக வைத்தாலும்...
Posted by Balamurali at 2:10 PM 0 comments
Labels: கவிதைகள்
இது கவிதை அல்ல!
ஒரு தளத்தில் படித்தபோது
மிகவும் யோசிக்க வைத்த வார்த்தை.
"விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள்.
ஒரு வேளை இதன்பிறகு நாம் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்."
Posted by Balamurali at 2:00 PM 1 comments
Labels: இது கவிதை அல்ல...
Posted by Balamurali at 1:33 PM 0 comments
Labels: கவிதை மாதிரி...
Posted by Balamurali at 12:53 PM 0 comments
Labels: குறும்பா(ஹைக்கூ....)
கவிதைகள் சொல்கிறேன்
கண்டதையும் சொல்கிறேன்
காதலை மட்டும்...
சொல்ல முடியாமல்...
:))
Posted by Balamurali at 12:37 PM 0 comments
Labels: கவிதைகள்
நானும்
காத்திருக்கிறேன்
காலம் தரும்
சிறப்பான வாழ்வு -எனும்
தளர்ந்து விடா
நம்பிக்கையுடன்...
Posted by Balamurali at 9:40 PM 0 comments
Labels: கவிதைகள்
Posted by Balamurali at 8:53 PM 0 comments
Labels: SMS அனுப்பலாமா
வாழ்கிறேன் நானும்
என்று பிறந்ததற்காக...
வாழாதே!
மக்கள் சேவையில்
பிறவிப்பயன் கண்டு
வாழ்வினை வெற்றிகொள்!
Posted by Balamurali at 3:22 PM 1 comments
Labels: கவிதைகள்
வஞ்சகமும் சூழ்ச்சியும்
நிறைந்த வையகத்தில்
நன்றியுணர்ச்சியினை
நாயினிடத்தில்...
கற்க முயலுகின்றதோ
நவீன மழலை?
Posted by Balamurali at 8:03 PM 0 comments
Labels: கவிதைகள்
இந்நாட்களில்...
அதிகம் சேர்க்கவேண்டும்
என்பதற்காகவே -அதிகம்
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்
Posted by Balamurali at 4:10 PM 0 comments
Labels: கவிதைகள்
காதலும், கற்பனை நேசமும்
கறிக்குதவா ஏட்டுச் சுரைக்காய்!
சொந்தமான பந்தம்தான்
கடைசி வரை நிஜமாகும் சொந்தம்!
Posted by Balamurali at 3:18 PM 0 comments
Labels: கவிதைகள்
எனக்கு வந்த சில SMS
1."If people talk behind your back" what does that mean? simple, it
means U R 2 STEPS AHEAD of them, don't worry about such people..."
2.We Love ourself Even after Doing Many Mistakes... Then How can We
Hate others for their Small Mistakes... Strange, But True...
3."Waves are my inspiration.Not because they rise and fall, but
because each time they fall, they rise again"-Dr.Kalam.
4)"if god does not give us what we want he defin nitely gives us what
we need"
5)" accept what you cannot change, change what you cannot accept.
that is the key to be happy in life"
6)"patience and delay achive more than force and rage"
Posted by Balamurali at 3:18 PM 0 comments
Labels: SMS அனுப்பலாமா
இது உனதா? இல்லை எனதா?
இது உனதா? இல்லை எனதா?
உலகம் தோன்றியதுமுதலே
வர்க்கப்போராட்டத்திற்கும்...
வாரிசுப் போராட்டத்திற்கும்...
வாழ்க்கைப் போராட்டத்திற்கும்...
வழிகாட்டியாகவும் திசை மாற்றியாகவும்
தோன்றிய வாசகம்!
Posted by Balamurali at 12:46 PM 0 comments
Labels: கவிதைகள்
உறக்கம்
இறப்பின் ஒத்திகை
இறப்பு
நிரந்தர உறக்கம் !
-------xxxxxxx------
தோல்வி = வேதனை
வேதனை+அவநம்பிக்கை=பெரும்தோல்வி
வேதனை+முயற்சி=சாதனை
-------xxxxxxx------
அன்பு
அதிகமாகும்போது
பித்து பிடிக்கும்
அன்பு கொண்டவர்மீது
நிராகரிக்கப்படும்போது
தண்டனையாகும்
அன்பு கொண்டவருக்கு
-------xxxxxxx------
காதல் வந்தால்
சுயம் போகும்...
சுயம் போனால்
காதல் வரும்
ஞானத்தின் மீது!
------xxxxx--------
Posted by Balamurali at 9:33 PM 0 comments
Labels: குறும்பா(ஹைக்கூ....)
சுதந்திரம்...
எல்லா வசதிகளும்
கிடைக்கும் வாய்ப்பிருந்தும்...
வண்ணத்துப்பூச்சிக்கு கிடைக்கும்
சுதந்திரம் கூட கிடைக்காமல்
சூழ்நிலைக்கைதியாய் மனிதன...
Posted by Balamurali at 7:57 PM 0 comments
Labels: கவிதைகள்
Posted by Balamurali at 5:46 PM 0 comments
Labels: கவிதைகள்
Posted by Balamurali at 5:42 PM 0 comments
Labels: கவிதைகள்
Posted by Balamurali at 2:45 PM 0 comments
Labels: கவிதைகள்
ஒரு ராகம் உனக்குள்ளே...
ஒரு ராகம் எனக்குள்ளே..
ஒன்றினையும் ஒரே ராகமாக
என்றிருந்தேன் சில காலமாக
இன்றும் இருக்கிறேன் ஒரே ராகமாக
ஒரு தலைராகமாக...
Posted by Balamurali at 1:31 PM 0 comments
Labels: கவிதைகள்
சுவாசக்காற்றிலும்...
அசுத்தங்கள்
நிறைந்திருக்கும்...
உன் நேசத்தில் மட்டுமே
பரிசுத்தம்
நிறைந்திருக்கும்!
Posted by Balamurali at 10:48 AM 0 comments
Labels: கவிதைகள்
சிக்னல்...
பொது மக்களின்
பொறுமையை
சோதிக்கும் களம்!
****************************
சிக்னல்...
விதி விலக்கு
வி.ஐ.பிகளுக்கு மட்டும்!
****************************
Posted by Balamurali at 12:52 PM 0 comments
Labels: குறும்பா(ஹைக்கூ....)
லட்சியத்திற்கும்...
யதார்த்தத்திற்கும்...
இடையிலான
போராட்டம்..!
Posted by Balamurali at 12:34 PM 0 comments
Labels: குறும்பா(ஹைக்கூ....)
Posted by Balamurali at 12:26 PM 0 comments
Labels: ஜோக் சொல்லப்போறேன்
Posted by Balamurali at 5:56 PM 0 comments
Labels: ஜோக் சொல்லப்போறேன்
இன்னும்ஜோக் சொல்லப்போறேன்
யாரும் ஓடாதீங்க.
"இந்த எறும்பு சாக்பீஸை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது!"
"என்ன புரிஞ்சிடுச்சு?"
"எங்கயாவது ஆக்ஸிடெண்ட் நடந்தா போலீஸ் எதுக்கு சாக் மார்க் போடறாங்க?"
"எதுக்கு?"
Posted by Balamurali at 5:22 PM 0 comments
Labels: ஜோக் சொல்லப்போறேன்
"கலிகாலம்"
*********************************************************************
Posted by Balamurali at 5:13 PM 1 comments
Labels: ஜோக் சொல்லப்போறேன்
ரவி: நான் விமலாவுக்கு போன் பண்ணினப்ப அவங்க அம்மா எடுத்துட்டாங்க...
ராமு: அட, அப்புறம் என்ன ஆச்சு?
ரவி: ராங் மெம்பர்னு சொல்லி வெச்சுட்டேன்
*************************************************************************
அப்பா: எதை வேணும்னாலும் பண்ணு என்னை தொந்தரவு பண்ணாதே...
**************************************************************************
டாக்டர்: ஹலோ! ரவி சவுக்கியமா இருக்கீங்களா?
ரவி: சவுக்கியமா இருந்தா ஏன் உங்களை பார்க்க வரேன்?
***************************************************************************
ரவி: படிப்பை முடிச்சிட்டீங்க மேல என்ன பண்ணப் போறீங்க?
ரகு: மேல ஒண்ணும் பண்ண முடியாது. பூமியிலேதான் எதாவது பண்ணனும்.
****************************************************************************
Posted by Balamurali at 3:45 PM 0 comments
Labels: ஜோக் சொல்லப்போறேன்
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்"
"அய்யோ!"
என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
Posted by Balamurali at 3:43 PM 0 comments
Labels: ஜோக் சொல்லப்போறேன்
ஒரு மகா சோம்பேறிகிட்டே அவங்கப்பா
கேட்டாரு,
"ஏண்டா எப்ப பார்த்தாலும் சும்மாவே படுத்து கிடக்குறியே! உருப்படியா
எதாவது வேலை தேடக் கூடாதா?"
"என்ன வேலைக்கு போகச் சொல்ற?
எல்லாமே கஷ்டமான வேலையா இருக்கு!"
"ஏன் அந்த துணிக் கடையில வரச் சொன்னாங்களே போகக் கூடாதா?"
"அது சேல்ஸ் மேன் வேலை நின்னு நின்னு கால் வலி கண்டிடும்"
"சரி அந்த மளிகைக் கடையில பில் போட கூப்பிட்டாங்களே அதுக்காவது
போகலாமில்ல..."
"அது ஒரே போர் உக்கார்ந்து உக்கார்ந்து இடுப்பு வலி கண்டிடும்"
"சரி அந்த டி வி ஷோரூம் வேலைக்கு போகலாமில்ல?"
"அதுவும் ரொம்ப கஷ்டம்பா டி வியைப் பார்த்து பார்த்தே கழுத்து வலி
கண்டிடும்"
"அப்ப எந்த வேலைக்குதான் போவே?"
"ஏம்பா இப்படி உயிரை எடுக்கிறே?
படுத்துக்கிட்டே பார்க்கிற மாதிரி எதாவது ஈசியான வேலை இருந்தா சொல்லு பார்க்கிறேன்"
Posted by Balamurali at 3:37 PM 0 comments
Labels: ஜோக் சொல்லப்போறேன்
Posted by Balamurali at 1:29 PM 0 comments
Labels: மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்
அகிலமெங்கும்
தேடிக் கொண்டிருக்கிறோம்
அகத்தில்
இருப்பதை அறியாமல்!
Posted by Balamurali at 1:02 PM 1 comments
Labels: குறும்பா(ஹைக்கூ....)
பிறப்பிலிருந்து...
இறப்பு வரை
தொடரும் சங்கிலியாகத்தான்
இருக்கிறது... இந்த சன்மானம்.
ஆனாலும் ஆயிரக்கணக்கில்
எழுதிக்குவிக்கும் கவிஞனுக்கு...
ஒரு கமெண்ட் கிடைத்தால்
அதுவே பெரிய சன்மானம்!
Posted by Balamurali at 11:05 AM 0 comments
Labels: கவிதைகள்
காத்திருத்தலில்...
சுகம்!
காத்திருக்க வைப்பதில்...
சோகம்!
Posted by Balamurali at 10:05 PM 0 comments
Labels: கவிதைகள்
குழம்பிய
குட்டையாய்...
காதலுக்கு
காத்திருக்கும்
மனசு!
Posted by Balamurali at 10:01 PM 0 comments
Labels: கவிதைகள்
சாதாரண
விஷயங்களுக்கெல்லாம்
வரும் கோபம்
சத்தியமாக
வர மறுக்கிறது
நீ தவறே செய்தாலும்!
Posted by Balamurali at 9:56 PM 0 comments
Labels: கவிதைகள்
கோவில் - ஹைக்கூ...
ஒரு கோவிலே...
கோவிலுக்கு...
போகிறதே!
அம்மா!
Posted by Balamurali at 6:26 PM 0 comments
Labels: குறும்பா(ஹைக்கூ....)
Posted by Balamurali at 3:05 PM 0 comments
Labels: குறும்பா(ஹைக்கூ....)
மானிடத்தின் தேவை எதுவென்று நினைக்கிறீர்கள்? ''மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..
மகிழ்ச்சி''! ஆமாம். மகிழ்ச்சியோடு வாழும் வாழ்க்கைதானே வெற்றிகரமான
வாழ்க்கையாகும்.
அந்த மகிழ்ச்சியை மன நிறைவின் மூலம் நாம் உணர்கிறோம். அப்படியோர்
மனநிறைவைப் பெறுவதற்கான இந்த நான்கு குணங்களும் நமக்குள் வந்துவிட்டால்
நாம் முழுமையாக வெளிப்பட்டு நமது இலக்கை நிச்சயமாக எட்டமுடியும்.
மனிதநேயம்
ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் மொட்டுவிட்டிருக்கும் முதன்மையான இயல்பு இந்த
''நேயம்''. இந்த மொட்டானது மலர, மலர மனிதனின் வாழ்க்கையும் மலர்ந்து
மணம் வீசத் தொடங்கி விடுகிறது.
அதென்ன நேயம்? அன்பு, பாசம், கருணை, காதல் என்னும் சொற்களின் சாரம். இந்த
நேயமே மனிதர்களை இணைக்கிறது, பிணைக்கிறது, அரவணைக்கிறது, ஆற்றல்
தருகிறது, மன்னிக்கிறது, ஆறுதல் தருகிறது, ஊக்கம் தருகிறது,
உருவாக்குகிறது...
அப்படிப்பட்ட நேயமே மனித வாழ்வின் அடிப்படையும், அவசியமானதும்,
அற்புதமானதும், ஆக்கப்பூர்வமானதுமான குணமாகும். நேயம் மட்டும் மலராது
போனால், மனித குலமே வேரற்றுப் போகும். புகையும், பகையும், போரும்,
வெறுப்பும், விரக்தியுமே மிஞ்சும். சுயம் கெட்டு, சூழலும் கெட்டு மனித
இனம் பட்டுப் போகும். இந்தப் பிரபஞ்சமே இற்றுப்போகும்.
இந்தப் பிரபஞ்சம் என்னும் பெரும்பொருளே, ''நேயம்'' என்னும் அரும்
பொருளால் உருவானதே அன்றி வேறில்லை. கருணை வடிவான எதையும் நாம் கடவுளென்று
அழைப்பதும் அதனால்தான். நேயத்தின் கருப்பை தாய்மை. தாய்மையின்
பரிணாமந்தானே இந்த உயிரினம். அத்தனை அருங்குணங்களுக்கும் தலையாயது நேயமே
என்பதால் நேயத்தை நம் நெஞ்சின் அடித்தளமாக்குவோம்.
நேர்மை
நேர்மையானது வேறொன்றுமில்லை, அது நிஜமாய் இருப்பது. நம்பகத்தன்மையின்
மறுபெயரே நேர்மை. உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்வது அது. சரியாய்
முறையாய் நடப்பது. நேர்மை என்பது நேர் நிற்பதைக் குறிக்கிறது.
பேராசை கொள்பவர்கள் பொறாமைப்படுவார்கள், பொறாமைப்படுபவர்கள் சூழ்ச்சி
செய்வார்கள், குறுக்கு வழியில் செல்ல முயல்வார்கள், பொய் சொல்வார்கள்,
கோபப்படுவார்கள், குதர்க்கம் பேசுவார்கள், ஆரம்பத்தில் அவர்கள் காட்டில்
மழை பெய்யும். நாளடைவில் அத்தனையும் பொய்த்துவிடும். இது இயற்கையின்
நியதி. நேர்மை தொடக்கத்தில் கடினம். நேர்மையாய் நடக்கத் துணிவு
வேண்டும், மனதில் உறுதிவேண்டும், நாளடைவில் நேர்மையே வெல்லும். நெஞ்சில்
அமைதி குடிகொள்ளும்.
வாழ்க்கையானாலும், வர்த்தகமானாலும் அரசியலானாலும், சமூகமானாலும் ஒவ்வொரு
தனி மனிதனும் நேர்மையின் வழி நிற்கும்போது அவன் ஒரு தலைசிறந்த தலைவனாக,
பலரும் போற்றும் முன்னுதாரணமாகத் திகழ்வான் என்பது உறுதி. உலகின்
முன்னோடிகளெல்லாம் நேர்மையைக் கடைபிடித்து நெஞ்சு நிமிர வாழ்ந்தவர்களே!
என்பதுதான் வரலாற்று உண்மை. வரலாறுகளை நினைவில் கொள்வோம். வாழ்வில்
நேர்மை கொள்வோம். நாமும் வரலாறு படைப்போம்.
நேரம்
''மணி என்ன''? எனக் கேட்டு நமது மணிக்கட்டைத் திருப்பச் செய்யும்
பொழுதெல்லாம் நமக்கு உணர்த்துவது நேரத்தின் அருமையைத்தானே! ''நேரத்தை''
நறுக்குத் தெறித்தாற்போல் கூறுவது என்றால் அதை ''நமது வாழ்நாள்'' என்று
வரையறுப்பதுதான். நேரச் செலவு என்பது நமது வாழ்நாளின் செலவென்று உணர்வது
தானே பொருந்தும்.
செலவழிக்கப்பட்ட பணத்தை, செலவழிக்கப்பட்ட பொருளை மீண்டும் பெற்றுவிட
முடியும். ஆனால் செலவழிக்கப்பட்ட நேரத்தை நம்மால் திரும்பப் பெறமுடியுமா
என்ன?
''நேரத்தை மதித்தல்'' என்பது அரிய பண்பு, நேரத்தைப் போற்றுபவர்கள்
வெற்றி பெறுகிறார்கள், உடல் நலத்தோடு வாழ்கிறார்கள், அவர்கள் மன
உளைச்சலுக்கு ஆளாவதில்லை. காரணம் தெரியுமா? நேரத்தைப் போற்றுபவர்கள் ஏதோ
ஒரு இலக்கைக் குறித்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலக்கிருப்பதால்
அவர்களிடம் ஒரு திட்டமிருக்கிறது. திட்டமிருப்பதால் அவர்களிடம் முன்
உரிமைப் பட்டியலிருக்கிறது. முன்னுரிமைப் பட்டியல் என்பது நேர
நிர்வாகத்திற்கான அடிப்படையே அன்றி வேறில்லை.
அவர்களிடம் ''அலுவலக நேரம்'', ''வீட்டு நேரம்'', டி.வி நேரம்,
உடற்பயிற்சி நேரம், படிக்கும் நேரம், சந்தை நேரம், சிந்தை நேரம், எனப் பல
நேரங்கள் உண்டு. ஆமாம் அவர்கள் நேரத்தை நிர்வகிக்கிறார்கள். எனவே தமது
வாழ்க்கையை தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். நாமும் நம் நேரத்தின்
மீது கவனம் செலுத்தத் தொடங்கினால் வள்ளுவர் சொல்வது போல உலகையே
வெல்லலாம்.
''ஆடிப்பட்டம் தேடி விதை'' ''காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்''
என்பவையெல்லாம் ''ஒவ்வொரு செயலுக்கும் உரிய, உகந்த காலமென்று ஒன்று
உண்டு. அதனை உணர்ந்து செயல்பட்டால் எதிலும் வெல்லலாம்'' என்பதையே நமக்கு
எடுத்துரைக்கிறது. எனவே நாம் நமது காலத்தின் அருமையை உணர்வோம்,
காரியமாற்றுவோம், வெற்றி பெறுவோம்.
நேர்த்தி
எதையும் செய்து முடிக்கும் ஆற்றலை ''செய்திறன்'' என்கிறோம். சரியானதைத்
தேர்ந்தெடுத்து சரியான முறையில் செய்து முடிக்கும் முறைமையை
''செயல்நேர்த்தி'' என்கிறோம்.
''செய்வன திருந்தச் செய்'' என்கிறது தமிழ். ஆனால் நடைமுறையில், நாம்
செய்த செயலையே மீண்டும், மீண்டும் திரும்பச் செய்து காலத்தையும்,
மூலப்பொருள்களையும், மனித சக்தியையும் வீணடிக்கிறோம். ஒவ்வொரு முறையும்,
ஒவ்வொரு செயலையும் ஒழுங்காய் செய்வது என்பதையே நேர்த்தி என்கிறோம்.
''நேர்த்தி'' என்பது செய்யும் செயலை மட்டும் குறிக்காமல் செயல்முறையையும்
வலியுறுத்தி நிற்கிறது. செய்முறை என்பது அதில் ஈடுபடும் மக்களை எப்படிப்
பயன்படுத்துகிறோம் என்பதை பற்றியது. மக்களை ஈடுபடுத்தும் எந்தச்
செயலையும் முறையாகச் செய்ய வேண்டுமெனில், உரையாடும் கலை, ஊக்கமூட்டும்
முறை, பிறரை புரிந்து கொள்ளும் விதம் மற்றும் சிக்கலைத் தீர்த்து
வைக்கும் அணுகுமுறை என இத்தனையிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
அப்போதுதான் நேர்த்தியோடு நாம் நம் குடும்பத்தையோ, நிறுவனத்தையோ,
தொழிலையோ, அரசியலையோ, சமூக அமைப்பையோ நடத்த முடியும் என்பதுதான்
உளவியல்பூர்வமான நடைமுறை உண்மை. அப்படிச் செயல்படும்போது அதில்
ஈடுபட்டிருக்கும் அனைவர் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும். அவர்கள் யாவரும்
ஒரே அணியாகச் செயல்படுவார்கள்.
இந்த அணுகுமுறையில் அடியெடுத்து வைத்து நேயம்கொண்டு, நேர்மை கொண்டு,
நேரம் பேணி, நேர்த்தி காண்போம்! நம் வாழ்க்கையை மகிழ்ச்சியால்
நிரப்புவோம்.
(நன்றி:சிஃபி தமிழ்)
Posted by Balamurali at 2:53 PM 1 comments
Labels: மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்
Posted by Balamurali at 1:39 PM 1 comments
Labels: மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்
உடைத்திடும் பொழுதினில்
வேதனைப்படுமோ..?
செதுக்கிடும் பொழுதினில்
பெருமிதப்படுமோ..?
அர்ச்சிக்கும் பொழுதினில்
ஆனந்தப்படுமோ..?
உருவங்கள் மாறிடும்
உயிரற்ற கல்..!
Posted by Balamurali at 1:36 PM 0 comments
Labels: கவிதைகள்
மீண்டும் மீண்டும்
பூப்பதால்தான்
செடிகளும்...
புத்துணர்ச்சி
பெறுகின்றன!
வெட்ட வெட்ட
தழைப்பதனால்தான்
மரங்களும்...
விருட்சங்களாகின்றன!
இரவும் பகலும்
மாறி மாறி வருவதால்தான்...
நாட்களும்...
இனிமையாகின்றன!
வெற்றியிலும்,தோல்வியிலும்
முயற்சியினை தொடரும்
மனிதன்தான்...
சாதனையாளன் ஆகிறான்!
Posted by Balamurali at 1:34 PM 0 comments
Labels: கவிதைகள்
மனித நேயத்தின்...
மகத்துவத்தில்...
உயர்வளிக்கும்...
சமத்துவத்தில்...
ஒருங்கிணைந்த...
உழைப்பில்...
சகோதரத்துவத்தின்...
மகிழ்ச்சியில்...
புதிய சரித்திரம் படைக்க...
முயற்சிப்போம்
இனிய புத்தாண்டில்..!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Posted by Balamurali at 8:37 PM 0 comments
Labels: கவிதைகள்
Posted by Balamurali at 7:33 PM 0 comments
Labels: கவிதைகள்
கண்ணில் தோன்றும் காட்சியெல்லாம்
கவிதையாக்கத்தோன்றும்..
ஆயினும் உணர்வின் பதிவுகள் மட்டுமே..
கவிதையாகத்தோன்றும்!
விவாதங்கள் பலநேரங்களில்
வெட்டியாகத்தோன்றும்..,
விவாதமில்லா கருத்துக்கு..
வெற்றி எங்கே தோன்றும்?
நல்ல கருத்துகள் பல நேரங்களில்
கண்டு கொள்ளப்படாமல் போகும்...
ஆயினும் வலிமையான கருத்துகள்
என்றும் நிலைத்து நிற்கும்!
Posted by Balamurali at 5:52 PM 0 comments
Labels: கவிதைகள்
ரொம்ப முக்கியமாக
ரொம்பவே வேண்டியவருக்கு...
போன் பண்ண வேண்டியிருந்தது.
பேலன்ஸ் இல்லாததால்
மிஸ்டு கால் பண்ணினான்
எப்படியும் பதில் வரும் எனும் நம்பிக்கையில்...
பதிலும் வந்தது மிஸ்டு காலாகவே!
புரிந்தது!
வேணும்னா அவன் பேசட்டுமே!
என்கிற எண்ணத்தில்...
மீண்டும் இரு பக்கமும் தொடர்ந்தது...
மிஸ்டு காலாகவே!
கடைசி வரையிலும்...
கால் பண்ணவே இல்லை இருவரும்...
இப்பவும் இப்படித்தான்...
மிஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்
பலரும்,
பல நண்பர்களையும்...
பல உறவுகளையும்...
Posted by Balamurali at 12:17 PM 0 comments
Labels: கவிதைகள்
பேதமை
பூவுக்கும், சாவுக்கும்
மதமில்லை...
பூமிக்கும், சாமிக்கும்
பேதமில்லை...
வானுக்கும், நீருக்கும்
நிறமில்லை...
அன்புக்கும், அறிவுக்கும்
எல்லையில்லை!
Posted by Balamurali at 11:59 AM 0 comments
Labels: கவிதைகள்
புத்திசாலிகளும்,
முட்டாள்களும்
பிறப்பதில்லை...
உருவாக்கப்படுகிறார்கள்!
Posted by Balamurali at 8:45 PM 0 comments
Labels: கவிதைகள்
பணமென்றால்
பிணமும் வாய் திறக்கும்
என்பதனை சோதிக்கவோ?
இறந்தவர்
நெற்றியில் காசு!
Posted by Balamurali at 8:42 PM 0 comments
Labels: கவிதைகள்
கொஞ்சம் நாள் என்
அம்மாவை
பிரிந்திருந்த
ரணத்தின் பதிவு இது.
அம்மா!
உன்னைப்
பிரிந்திருந்த அந்த
சில நாட்களில்
நான் இழந்தது
எத்தனையோ!
இன்னும் நான்
மீளவில்லை அந்த
பிரிவின்
துயரிலிருந்து
உன்னிடம் வந்து
சேர்ந்த பின்னும்.
எதைச் சொல்வேன்?
எதைவிடுவேன்?
நிச்சயம் நான்
பைத்தியமாகவே
ஆனேன்.
இன்னுமொரு பிரிவினை
நிச்சயம் என்னால்
தாங்க முடியாது.
இனியொரு
பிரிவென்றால் அது
உயிரின் பிரிவாக
இருக்கட்டும்.
Posted by Balamurali at 10:28 AM 1 comments
Labels: கவிதைகள்
New Delhi |