Friday, January 26, 2007

சம்மதித்தால்...

நிலவுக்கு
போவதொன்றும்
சிரமமான காரியமில்லை
அன்பே - நீ
சம்மதிதால்...
டூயட்டே படி விட்டு வரலாம்!

தேடல்...

தேடினேன்...

அன்பினை பகிர்ந்து கொள்ள
அரியதோர் இதயத்தினை!



தேடினேன்...

கிடைத்த இதயத்தினை
பரிசுத்தத்தின்
பாதச்சுவடுகளில்
பதித்திடும் வாய்ப்புகளை!



தேடினேன்...

கிடைத்த வாய்ப்புக்களில்
உள்ளத்தினை உணர்த்திடும்
தைரியத்தினை!

தேடினேன்...

தைரியம் வந்த போது
காதலித்துத் தொலைத்த
காதலை!

Wednesday, January 24, 2007

"ஹேப்பி நியூ இயர்"


நாட்காட்டி வாங்கவும்
வசதியில்லை,
ஆனாலும் மகிழ்ச்சியாகத்தான்
இருக்கிறது...!
"ஹேப்பி நியூ இயர் சொல்வதில்!"

இளைஞனே!

உனது முயற்சிக்கு
வாய்ப்புகள் காத்திருக்கு..!
உனது வெற்றிக்கு
லட்சியங்கள் காத்திருக்கு..!
உனது சாதனைக்கு
மாலைகள் காத்திருக்கு..!
உனது உழைப்பிற்கு
சரித்திரம் காத்திருக்கு..!
இருந்தும் - நீ!
எதற்காக “காத்து” இருக்கிறாய்
சோம்பலை தகர்த்தெறியாமல்?

" பெருமிதம் செய்வோம்!"

செம்மொழி தமிழினை
உயர்வுறச் செய்திடும்
திருப்பணி செய்து
மகிழ்ந்திடுவோம்!

ஞானமும் கேள்வியும்
ஞாலத்தில் தழைத்திட
பாரதம் கல்விக்கூடமாய்
திகழ்ந்திடச் செய்வோம்!

விந்தைகள் செய்திடும்
வ்ஞ்ஞானமும் செய்து
வையகத்தாரை
வியந்திடச் செய்வோம்!

பாரத மைந்தர்
ஒற்றுமைக்கொரு
உதாரணமென்று
உணர்ந்திடச் செய்வோம்!

பாரத மகவெனில்
பாரினில் புகழ்ந்திடும்
காரியம் யாவும்
புரிந்திடுவோம்!

உலகே வியக்கும்
உன்னத அன்பினில்
உயர்வுறும் மனிதராய்
திகழ்ந்திடுவோம்!

காலக் கொடுமை!


முன்பெல்லாம்
மணி கேட்டால்...
சூரியனைப் பார்த்து
சொல்வார்கள்...
இப்போது
சீரியலைப் பார்த்து
சொல்கிறார்கள்..!

S.Viswanathan.chennai.

வித்தியாசம்?

போலீசுக்கும்
பொறுக்கிக்கும்
ஒரு வித்தியாசம்தான்
"அடிதடி" செஞ்சா பொறுக்கி...
தடியடி செஞ்சா போலீஸ்...

S.Devarajan.Karur.

Sunday, January 14, 2007

உழவர் திருநாள்!




உழைப்பின் பெருமைதனையும்,
உழவின் பெருமைதனையும்,
உலகினிற்கு உணர்த்தும்
உயர்திரு நன்னாளாம்...
உழவர் திரு நாளதனில்...
உலகமெங்கும் சமத்துவத்தின்
உவகை பூக்கும் சகோதரத்துவத்தில்
உள்ளார்ந்த் நிறைவுடன்
உதிக்கும் பொழுதுகளெல்லாம்
உழைப்பின் உற்சாகத்தில்
உயர்வுற்று சிறக்க,
உயர்நெறிதனில் வாழ்ந்திட
உறுதி கொள்வோம்!

Saturday, January 13, 2007

காணோம்..!

தூயவர்கள்
கோயிலுக்கு போன போது
துயரங்கள்
காணாமல் போயின...
தீயவர்கள்
போன போதோ...
கடவுளே...
காணாமல் போனார்!

இடம்...


நேற்றுவரை...
என் இதயத்தில்...
யாருக்கும் இடம் இல்லை..!
இன்று...
என் இதயமே...
என்னிடம் இல்லை

.

உறுதி..!


பாறையில் உறுதியிருந்தால்தான்...
மலைகளுக்குப் பெருமை!
மனதில் உறுதியிருந்தால்தான்...
மனிதனுக்குப் பெருமை!

காதல்...?


காணும் பெண்களிடமெல்லாம்
தோன்றுவதா?
கண்ட பெண்களிடமும்
தோன்றுவதா?
தோன்றி மறைவதா?
அல்லது...
தோன்றாமலே மறைவதா?
மறைந்தே இருப்பதா?
அல்லது
மறைத்தே வைக்கப்படுவதா?

சுமை!


மூட்டை சுமந்து
கஷ்டப்படக்கூடாதென்று
பள்ளிக்கு அனுப்பினார்
தந்தை...
பாவம் குழந்தை
பள்ளிக்கும் (புத்தக)
மூட்டையுடன் தான்
செல்கிறது..!

ட்ராபிக் ஜாம்...


நூறு அடி ரோட்டை கடக்கவும்
ஆறு மணி நேரம் ஆகச்செய்யும்
தவிர்க்க இயலா தண்டனை!

தீப ஒளி ஏற்றுவோம்!


*அல்லதை தீய்த்து
நல்லதை நிலை நாட்ட
பிரகாசமாக
தீப ஒளி ஏற்றுவோம்!
*உள்ளதைக் கொண்டு
நல்லறத்தோடு-இல்லாரும்
மகிழ்வுறச்செய்து
இன்ப ஒளி ஏற்றுவோம்!
*பாவ இருளை தகர்த்து
நம்பிக்கை ஒளியினை
புதுப்பித்துக்கொண்டு
புத்துணர்வுடன்
ஞான தீப ஒளி ஏற்றுவோம்!

புத்தாண்டில்...



மனித நேயத்தின்...
மகத்துவத்தில்...
உயர்வளிக்கும்...
சமத்துவத்தில்...
ஒருங்கிணைந்த...
உழைப்பில்...
சகோதரத்துவத்தின்...
மகிழ்ச்சியில்...
புதிய சரித்திரம் படைக்க...
முயற்சிப்போம்...
பிறக்கும் இனிய புத்தாண்டில்..!
(2007)
"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"
********************************
நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.
********************************

மழலையின் சிரிப்பில்...!



ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாம்...
மழலையின் சிரிப்பில்
சொர்க்கத்தைக் காணலாம்!
நிலவு தோன்றினால்
குளிர்ச்சி தோன்றும்...
மழலை தோன்றினால்
மகிழ்ச்சி தோன்றும்!
கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்...
மழலையின் தரிசனம்
மாறாத ஆனந்தம்!
பூக்கள் மலர்ந்தால்
புவி மலரும்...
மழலைகள் மலர்ந்தால்
மனிதம் தழைக்கும்!
பூக்கும் மலர்களை நிலவுக்கு சூட்டுவோம்!
பூத்த மழலைகளை
வாழ்த்தி போற்றுவோம்!

Wednesday, January 10, 2007

ஷாஜகான்கள்!


எல்லா ஷாஜகான்களும்
தயாராகத்தான்
இருக்கிறார்கள்...
ஒரு தாஜ்மஹாலை கட்டுவதற்கு...
ஆனால் மும்தாஜ்கள்
நல்ல வசதியான
இன்ஜீனியர்களை
தேடிக்கொண்டு
இருக்கிறார்கள்
கட்டுவதற்கு..!

ஹைக்கூ...



பூக்களும்...
வாசனை திரவியங்கள்
பூசிக்கொள்ளுமோ?
இவ்வளவு
நறுமணம் பரப்புகிறதே!

Monday, January 8, 2007

"வாழ்க்கை வசப்படும்...!"


வாழ்க்கை வசப்படும்...!

புன்னகைத்துப் பார்...
பூமி வசப்படும்!
முயற்சித்துப் பார்...
வானம் வசப்படும்!
காதலித்துப் பார்...
கவிதை வசப்படும்!
துணிந்து பார்...
வெற்றி வசப்படும்!
வாழ்ந்து பார்...
வாழ்க்கை வசப்படும்!

"காதல் சரித்திரம்...!"


காதல் சரித்திரம்...!
*மனித வாழ்வின்
துவக்க சரித்திரத்தின்
மகத்துவம் நிறைந்தது...
*அன்பைத் தேடும்
அடிபட்ட உள்ளங்களின்
அற்புத மருந்து...
*துயரத்தில் துடிக்கின்ற
இதயத்தை ஆற்றுவிக்கும்
தோழமை உணர்வு...
*சாதிக்கத் துடிக்கும்
லட்சிய மனங்களின்
ஊக்க மருந்து...
*அற்ப சந்தோஷம் காண
பேரானந்தத்தை தொலைக்காத
தூய அன்பு...
*உற்றவர் மீது
பற்றுதல் கூட்டி
உயர்வுறச்செய்யும்...
*ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுக்கும்
மாண்பினைப் போற்றும்...
*சமத்துவம் புரியும்
சரித்திரம் படைக்க
தனித்துவ வழி...
*தோற்றாலும் கூட
நிலையாய் இருக்கும்
அன்பின் காவியம்...
*எந்தப் பிறப்பிலும்
என்றும் பிரிந்திடாத
ஆருயிர் தெய்வீகம்...