Sunday, April 13, 2008
Friday, April 11, 2008
பட விளக்கம்
“வெற்றி நடை” மாத இதழினை ஆபீஸர்ஸ் கிளப் செயலாளர் பி.எஸ்.என்.எல். விமலாதித்தன் வெளியிட மூத்த உறுப்பினர். கே.பி. ரெங்கசாமி பெற்றுக் கொள்கிறார். அருகில் ஆசிரியர் பாலமுரளி, ஆபிஸர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர்.
Posted by
bala murali
at
11:18 AM
0
comments
வெற்றி நடை- மாத இதழ் வெளியீட்டு விழா
இதழ் வெளியீட்டு விழா!
கரூர் ஆபீஸர்ஸ் கிளப் சார்பில் “வெற்றி நடை” மாத இதழ் வெளியீட்டு விழா நடை பெற்றது. விழாவுக்கு துணைத்தலைவர் ஆடிட்டர்.ஆர்.பழனிசாமி தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் கரூர் ஹேண்ட்லூம் சிட்டி தலைவர்.எஸ்.கே.டி.எம்.கருப்பசாமி மற்றும் ஆடிட்டர் வி.சுப்புராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் இதழை ஆபீஸர்ஸ் கிளப் செயலாளர் பி.எஸ்.என்.எல்.விமலாதித்தன் வெளியிட மூத்த உறுப்பினர் கே.பி. ரெங்கசாமி பெற்றுக் கொண்டார்.
விழாவில் ஆசிரியர் நாகை.எஸ்.பாலமுரளி, இணையாசிரியர் எஸ்.தேவராஜன், டெக்ஸ்ட்ரானிக் டெக்ஸ்டைல் சாஃப்ட்வேர் நிறுவன விற்பனைப் பிரதிநிதி எம்.பழனி, இதழ் வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் திருமதி.எஸ்.பார்வதி, எஸ்.ஹரிஹரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆபீஸர்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஆசிரியர் பாலமுரளி நன்றி கூறினார்
Posted by
bala murali
at
11:14 AM
0
comments