சுட்டது..!
தலைப்புதானுங்க "சுட்டது..!"
கவிதை சுடாதது.(ஒரு முயற்சிதான்)
------------------------------------------
எனக்கு ஒரு கணமும்
உன்னைப் பிரியாதிருக்க ஆசைதான்..ஆனாலும்...
பிரிந்து விடுவதாய்ச் சொல்லிய..
உன் வார்த்தைகள்தானடி என்னைச்
சுட்டது!
இறப்பிலும் பிரியாத வரம் வேண்டுமென்றாய்..
ஆனாலும் பிரிவைப் பற்றியே பேசுகின்றாய்..
எனக்கான நேரங்கள் எல்லாம் உன் நினைவுகளுடனே..
வாழ்ந்திருக்கிறேன்..
எந்நேரமும் நான் உன்னை விட்டு விலகியதில்லை..
ஆனால் அதனை சோதித்துப் பார்க்க நினைக்கும்
உன் வார்த்தைகள் தானடி என்னைச் சுட்டது...
அதையும் நிரூபித்துக் காட்டியிருப்பேன்..
நான் அனுமனாக இருந்திருந்தால்..